கிரிக்கெட் வேற, சினிமா வேற.. சந்தானத்தால் திணறும் LGM வசூல்

LGM vs DD Returns: கடந்த ஜூலை 28ஆம் தேதி சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் LGM திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. பட ரிலீஸ்க்கு முன்பு வரை ஹரிஷ் கல்யாண் படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருந்தது இதற்கு மிகப்பெரிய காரணம் படத்தின் தயாரிப்பாளர் தோனி என்பது மட்டும்தான். அதே நேரத்தில் சந்தானம் வழக்கம் போல் சொதப்பி விடுவார் என அந்த படத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை.

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தோனியின் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். தோனியும் முதன் முதலில் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் அவருக்கு இருக்கும் வரவேற்பை வைத்து தான் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க வேண்டும். படம் ரிலீஸ் ஆகி மூன்று நாள் கலெக்சனில் தோனியின் ஆசை மொத்தமும் புஸ் என போயிருக்கிறது.

Also Read:மறக்க முடியாத சந்தானத்தின் 6 கேரக்டர்கள்.. பார்த்தாவுக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதை

சந்தானத்தின் கடந்த சில படங்கள் சரியாக போகாததால் டிடி ரிட்டன்ஸ் படமும் அப்படித்தான் இருக்கப் போகிறது என நினைத்த ரசிகர்களை சந்தானம் ஆச்சரியப்பட வைத்துவிட்டார். படம் முழுக்க வயிறு குலுங்க சிரிக்கும் அளவிற்கு நகைச்சுவை காட்சிகள் இருந்தது. இதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் மொத்தமும் வார இறுதி நாட்களில் சந்தானத்தின் படத்தையே பார்க்க குவிந்து விட்டனர்.

தோனியின் எல்ஜிஎம் திரைப்படத்தில் திருமணத்திற்கு முன்பு மாமியார் மற்றும் மருமகளுக்கு செட் ஆகிறதா என்பதை பார்ப்பதற்காக அவர்கள் செல்லும் ட்ரிப்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை இது. கதைக்களம் வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதையில் மொத்தமாக சொதப்பி வைத்திருந்தனர். இதனால் படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி இருக்கிறது.

Also Read:அப்படி இருந்த சந்தானம் இப்படி ஆயிட்டார்.. ஒரே நாளில் 4 பட சூட்டிங், அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

தோனி தயாரிப்பில் வெளியாகியிருக்கும் எல்ஜிஎம் திரைப்படம் முதல் நாள் 85 லட்சம் வரை வசூல் செய்தது. இரண்டாவது நாளான சனிக்கிழமை அந்த வசூல் ஒரு கோடியாக இருந்தது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 1.15 கோடி வரை வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு கோடி தான் வசூலித்து இருக்கிறது. இந்த படத்தின் மொத்த வசூல் இதுவரை 2.85 கோடி தான். படத்தின் மொத்த பட்ஜெட் 10 கோடியாகும்.

சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் முதல் நாள் 2.5 கோடி வசூலித்தது. இரண்டாம் நாள் அந்த வசூல் மூன்று கோடியாக அதிகரித்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஃபேமிலி ஆடியன்ஸ் மொத்தமாக இந்த படத்திற்கு குவிந்தனர். இதனால் நேற்றைய தினம் மட்டும் 3.40 கோடி வசூல் ஆகி இருக்கிறது. மொத்தத்தில் டிடி ரிட்டன்ஸ் இன் மூன்று நாள் வசூல் 8.45 கோடி ஆகும்.

Also Read:டிடி ரிட்டன்ஸ் சந்தானத்துக்கு வொர்க் அவுட் ஆனதா.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் ரிப்போர்ட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்