லியோவை விட குறைந்த கோட் பிஸ்னஸ்.. விஜய்யின் மார்க்கெட் சரிந்தா?

Vijay : விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடந்த திட்டமிட்டுள்ளனர்.

ரஷ்யாவில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் சூட்டிங் நடக்க உள்ளது. இந்நிலையில் கோட் படத்தின் டிஜிட்டல் உரிமையே நெட்பிளிக்ஸ் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து சாட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் வாங்கி உள்ளது.

ஆனால் விஜய்யின் முந்தைய படங்களை விட கோட் படம் குறைவாகத்தான் பிசினஸ் ஆகியுள்ளது. அதுவும் லோகேஷ், விஜய் கூட்டணியில் வெளியான லியோ படத்தை விட குறைவு. இதற்கு காரணம் விஜய்யின் மார்க்கெட் சரிந்ததா என்ற எண்ணம் தோன்றும்.

தாமதமாகும் ஓடிடி ரிலீஸ்

ஆனால் பொதுவாக எல்லா படங்களின் ஓடிடி பிசினஸ் இப்போது குறைந்திருக்கிறது. இதற்கு காரணம் சமீபத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு கோரிக்கை வைத்திருந்தனர். அதாவது படம் வெளியான 10 நாட்களிலேயே ஓடிடியில் வெளியாகி விடுகிறது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆகையால் படம் வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என கூறப்பட்டது.

ஆகையால் படங்கள் தியேட்டரிலேயே ஒரு மாதத்திற்கு மேல் ஓடியதால் ஓடிடி நிறுவனங்கள் படங்களை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். மேலும் வரும் நாட்களில் ஓடிடி வெளியீடு இன்னும் தாமதம் ஆனால் படங்கள் குறைந்த அளவுக்கே சேல்ஸ் ஆகும்.

எனவே ஹீரோக்களின் சம்பளமும் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் சரியான நேரத்தில் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் நுழைய இருக்கிறார். கண்டிப்பாக அவர் ஒரு நல்ல முடிவு தான் எடுத்திருக்கிறார்.

Next Story

- Advertisement -