லியோக்கு அடுத்த ஆப்பு ரெடி.. விஜய்யை விடமால் செக் வைத்து துரத்தும் உதயநிதி

நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு படம் அஜித்தின் துணிவு படத்துடன் மோதியது. 8 ஆண்டுகள் கழித்து தல, தளபதி சண்டை ரசிகர்களிடையே ஆரம்பித்த நிலையில், உதயநிதி ஸ்டாலினும் தனது பங்குக்கு சில வேலைகளை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விஜயின் வாரிசு படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை எஸ்.எஸ்.லலித் குமார் வாங்கினார்.

ஆனால் தற்போதுள்ள சூழலில் உதயநிதியின் அனுமதி இல்லாமல் ஒரு படத்தை கூட திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாததால் விஜயின் வாரிசு படத்துக்கு திரையரங்குகள் கிடைக்காமல் போனது. மேலும் துணிவு படத்தின் மொத்த திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை வாங்கிய ரெட் ஜெயிண்ட் , வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவின் கோரிக்கையை ஏற்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் மட்டும் வாரிசு படத்தை வாங்கி விநியோகம் செய்தது.

Also Read: துணிவு, வாரிசால் வசமாக சிக்கிக் கொண்ட ரெட் ஜெயிண்ட்.. உதயநிதிக்கு தண்ணி காட்டும் முக்கிய புள்ளி

இருந்தாலும் வாரிசு படத்தை காட்டிலும், துணிவு படம் வெற்றியடைய வேண்டி ,வாரிசுக்கு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி விடுமாறு சமூகவலைத்தள திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் உதயநிதி தரப்பு பணம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வாரிசு படம் 300 கோடி வசூலை எடுத்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாகியது.

இருந்தாலும் துணிவு படம் தான் வாரிசு படத்தை காட்டிலும் நல்ல ஒரு ஹிட்டை கொடுத்தது. தற்போது உதயநிதி, விஜய்யின் லியோ படத்தை வீழ்த்த புது திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா,மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

Also Read: ரெட் ஜெயண்ட் உதயநிதியால் கிடைத்த அஜித் பட வாய்ப்பு.. தலைகால் புரியாமல் சந்தோஷத்தில் ஆடும் பிரபலம்

மேலும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி இணையத்தை அதகளப்படுத்திய நிலையில், இப்படம் மீதான ஏதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூலாக மட்டுமே கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் ஆகியுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், இப்படத்திற்கு போட்டியாக உதயநிதி வாங்கியுள்ள பிரம்மாண்டமான படம் ஒன்று களமிறங்க உள்ளது. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கடந்தாண்டு திரையரங்குகளுக்கு பல படங்களை வாங்கி விநியோகம் செய்தது.

அதில் முக்கியமான படம் தான் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம், இப்படம் உலகளவில் 1000 கோடி வசூலை குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இப்படத்தின் சிஜி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ரிலீசாக உள்ளதையடுத்து பொன்னியின் செல்வன் பாகம் இரண்டை விஜய்யின் லியோ படத்துடன் மோத வைக்க உதயநிதி திட்டமிட்டு வருகிறாராம்.

Also Read: ஊத்தி மூட இருந்த ரெட் ஜெயண்ட்.. கடைசி நேரத்தில் உதயநிதிக்கு கண்ணை திறந்து விட்ட புண்ணியவான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்