மனோபாலாவுக்காக கடைசி ஆசையை நிறைவேற்றிய லியோ.. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த விஜய்யின் புகைப்படம்

கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து திரையுலகை வாட்டி வதைப்பது பிரபலங்களின் மரணம் தான். குறிப்பாக சொல்லணும் என்றால் நம்மளை சிரிக்க வைக்க வேண்டும் என்று அவர்களை காமெடியனாக பாவித்து நம்மளை சந்தோஷத்தில் அழுத்திய விவேக், டிபி கஜேந்திரன், மயில்சாமி இவர்கள் மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது இந்த வரிசையில் இயக்குனர், குணச்சித்திர நடிகர், காமெடியன் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முறை திறமையை கொண்ட மனோபாலா நேற்று அகால மரணம் அடைந்தார்.

ஏற்கனவே மயில்சாமியின் இறப்பிலிருந்து வெளிவர முடியாத சினிமா பிரபலங்கள் பலருக்கும் மனோபாலாவின் இறப்பு இன்னும் கூடுதலாகவே அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இவர் கல்லீரல் தொடர்பான நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பிறகு அவரது இல்லத்தில் நேற்று திடீரென்று காலமானார்.

Also read: தொடர்ந்து திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய 7 மரணங்கள்.. நண்பனை கூடவே அழைத்து சென்ற மயில்சாமி

இவருடைய இறப்பிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் அவர்களுடைய இரங்கலை தெரிவித்தார்கள். அத்துடன் சில பிரபலங்கள் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லியும் வருகிறார்கள். மேலும் ரஜினி அவருடைய ட்விட்டரில் “பிரபல இயக்குனரும் நடிகருமான என் அன்புத் தோழன் மனோபாலாவின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து ஆர் ஜே பாலாஜி, மம்முட்டி, செல்வராகவன், சிம்ரன் இன்னும் பல நட்சத்திரங்கள் அவர்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். அடுத்ததாக விஜய் அவர்கள் மனோபாலாவுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவர்கள் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். அதில் அவரை பார்க்கும் பொழுது மிகவும் வாடிய முகத்துடன், கையில் மாலை கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

Also read: அடுத்தடுத்து திரை உலக மரணங்களா.? சரத்பாபு இறந்ததாக கிளம்பிய புரளி, ஷாக் ஆனா ரஜினி

அத்துடன் மனோபாலாவின் கடைசி ஆசையையும் நிறைவேற்ற இருக்கிறார். அதாவது தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தில் மனோபாலாவின் காட்சிகளும் இருக்கிறது. இதை இவர் ஏற்கனவே நடித்துக் கொடுத்துவிட்டார். பிறகு லோகேஷ் இவ்வளவு காட்சிகள் வேண்டாம் முக்கியமான சில சீன்கள் மட்டும் போதும் என்று சொல்லி மற்றதெல்லாம் நீக்க சொல்லி இருந்தார்.

ஆனால் தற்போது விஜய், லோகேஷ் இடம் லியோ படத்தில் மனோபாலா நடித்த அனைத்து காட்சிகளுமே இருக்க வேண்டும் என்று கண்டிஷன் ஆக சொல்லிவிட்டார். ஏனென்றால் அவர் நடித்த கடைசி படம் இதுதான். அதனால் அவருடைய எல்லாவிதமான போர்சனும் கண்டிப்பாக மக்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல், கண்டிப்பாக இது தான் மனோபாலாவின் ஆசையாகவும் இருந்திருக்கும். அதனால் நம்மால் முடிந்தவரை அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

விஜய் மனோபாலாவுக்கு நேரில் சென்று அஞ்சலி

vijay-manobala-cinemapettai
vijay- cinemapettai

Also read: நண்பனை பிரிய முடியாமல் கூடவே போன மனோபாலா.. இரண்டே மாதத்தில் இப்படி ஒரு விபரீதமா.?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்