வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

35 வெரைட்டி காட்டிய லோகேஷ்.. சிங்கம் பிடரி போல் இருக்கும் விஜய்யின் நியூ லுக்

இப்போது எங்கு திரும்பினாலும் லியோ திரைப்படத்தை பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவே பலரையும் மிரட்டியது. அதிலும் வியக்க வைக்கும் வகையில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்து வருவது பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது எல்லாவற்றிற்கும் மேலாக வாரத்திற்கு ஒருமுறை லியோ படத்திலிருந்து ஏதாவது ஒரு அப்டேட் வந்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது விஜய்யின் ஹேர் ஸ்டைல் பற்றிய விவாதம் தான் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு லியோ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி இருந்தது.

Also read: கோலிவுட்டின் கேம் சேஞ்சர்..சூப்பர் ஸ்டாரையே காக்க வைக்கும் லோகேஷ் கடந்து வந்த பாதை

அதில் விஜய், லோகேஷ் கனகராஜ், சஞ்சய் தத் உட்பட பலரும் இருந்தனர். பயங்கர ட்ரெண்டான அந்த போட்டோவில் விஜய்யின் கெட் அப் ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது. அதிலும் அவருடைய ஹேர் ஸ்டைல் படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு சிங்கத்தின் பிடரி போல் இருந்தது. இதனால் படத்தில் அவருடைய கேரக்டர் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய்யின் ஹேர் ஸ்டைலுக்கு பின்னால் இருக்கும் ஒரு ரகசியம் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது எப்போதுமே தன்னுடைய படங்களில் ஹீரோவை எதார்த்தமாக காட்ட நினைக்கும் லோகேஷ் அதற்காக ரொம்பவும் மெனக்கெடுவார். அப்படித்தான் மாஸ்டர் படத்திலிருந்த விஜய்யின் ஹேர் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது.

Also read: கடைசியாக அப்பாவின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. லியோவுக்கு பின் எடுக்க போகும் புது அவதாரம்

அதைத் தொடர்ந்து தற்போது லியோ படத்தில் விஜய்யின் புது கெட்டப்புக்காக லோகேஷ் 35 விதமான ஹேர் ஸ்டைல்களை காண்பித்து இருக்கிறார். அது அனைத்திலும் எது விஜய்க்கு செட் ஆகும் என்று அலசி ஆராய்ந்து தான் தற்போது இந்த ஹேர் ஸ்டைல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் லியோ என்ற தலைப்பிற்கு இது பொருத்தமாகவும் இருக்கிறது.

மேலும் இந்த ஹேர் ஸ்டைல் பற்றி விஜய்யிடம் கூறிய லோகேஷ் இனி அடுத்தடுத்த திரைப்படங்களுக்கும் இந்த லுக்கை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த அளவுக்கு உங்களுக்கு இது நிச்சயம் பொருந்தும் என்றும் கூறியிருக்கிறார். இப்படித்தான் விஜய்யின் ஹேர் ஸ்டைல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படி பார்த்து பார்த்து செதுக்கப்பட்டு வரும் லியோ திரைப்படம் வெளிவருவதற்கு பல மாதங்கள் இருந்தாலும் இப்போதிலிருந்தே கொண்டாடப்பட்டு வருவது ஆச்சரியமாக இருக்கிறது.

Also read: லியோ படத்தை விட ரஜினிக்காக மெனக்கெடும் லோகேஷ் .. விக்ரமை விட வெறித்தனமாக தயாராகும் ஸ்கிரிப்ட்

- Advertisement -

Trending News