ஹீரோ அந்தஸ்தை காப்பாற்ற லியோ கூட்டணியின் மட்டமான வேலை.. வசூலில் இப்படி ஒரு பித்தலாட்டமா!

Leo-Vijay: லியோ படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த சூழலில் லியோ படத்தின் வசூல் நாளுக்கு நாள் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது முதல் நாளில் லியோ படம் 148.5 கோடி வசூல் செய்ததாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

லியோ படம் கிட்டதட்ட 4000 தியேட்டர்களுக்கு அதிகமாக திரையிடப்பட்டது. ஆனால் இதற்கு முன்னதாக ஜவான், கே ஜி எஃப் போன்ற பிரம்மாண்ட படங்கள் பத்தாயிரம் திரையரங்குகளுக்கு அதிகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த படங்களின் அதிகபட்ச முதல் நாள் கலெக்சன் என்றால் 128 கோடி தான். அது எப்படி லியோ மட்டும் 150 கோடியை நெருங்கியது என இப்போது கேள்வி எழுந்துள்ளது.

அதாவது சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் டாப் நடிகர்கள் இடையே போட்டி நிலவி வருகிறது. அதுவும் விஜய், அஜித், ரஜினி ரசிகர்கள் அதிகமாக இணையத்தில் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இப்போது அஜித் விடாமுயற்சி படத்தை தொடங்காததால் அவர் லிஸ்டில் இருந்து வெளியேறி விட்டார்.

இப்போதைக்கு ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் தான் இணையத்தில் அக்கபோரு செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஜெயிலர் படம் வெளியாகி 650 கோடியை தாண்டி வசூல் செய்து விட்டது. இதை எப்படியாவது முந்த வேண்டும் என்பதற்காக லியோ படக்குழு போலியான வசூல் விபரத்தை வெளியிட்டு வருவதாக சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் தங்களது ஹீரோ அந்தஸ்தை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக வசூலில் இவ்வாறு பித்தலாட்டம் செய்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. கண்டிப்பாக லியோ படம் 148 கோடி வசூல் செய்திருக்காது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிவதாக பலரும் கூறி வருகிறார்கள்.

இதனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக இணையத்தில் லியோ ஸ்கேம் என்ற ஹேஷ்டேக் அதிகமாக ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதை ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் தான் அதிகமாக பகிர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படி போலியான வசூல் விவரத்தை வெளியிட்டால் லியோ ஆயிரம் கோடி வசூல் அடைந்து விடும் என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை