லோகேஷ்க்கு லியோ காட்டிய பயம்.. தலைவர் 171 படத்தில் எடுக்கும் புது முயற்சி

Lokesh in Thalaivar 171: தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் வாண்டட் இயக்குனராக வருபவர் தான் லோகேஷ். சினிமாவிற்குள் நுழைந்து குறுகிய காலத்திற்குள் இவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டு பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். அதிலும் புதிதாக எல்சியு என்ற ஒரு ட்ரேட் மார்க்கை கொண்டு வந்து அனைவரையும் ஆவலாக எதிர்பார்க்கும் படி ஆக்கிவிட்டார்.

அப்படிப்பட்ட இவர் விஜய்யை வைத்து சமீபத்தில் கொடுத்த படம் தான் லியோ. இப்படம் பலதரப்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் வசூல் அளவில் நஷ்டம் ஏற்படாத அளவிற்கு ஓரளவுக்கு ஈடுகெட்டியது. இருந்தாலும் லோகேஷ் மீது வைத்திருந்த நம்பிக்கையை கொஞ்சம் குறைத்து விட்டது என்றே சொல்லலாம்.

அதனால் இதில் என்னென்ன தவறுகள் பண்ணி இருந்தாரோ, அதை எல்லாம் சரி செய்யும் விதமாக அடுத்த கட்ட முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதாவது லியோ-வில் செஞ்ச தவறை மீண்டும் செய்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். ஏனென்றால் அடுத்து இவர் இயக்கப் போகும் படம் தலைவர் 171.

Also read: லோகேஷ், விஜய்யை எரிச்சல் அடைய செய்த மன்சூர் அலிகான்.. இருக்கிறதையும் இழந்த வீரபத்ரன்

அதனால் எதிர்பார்ப்புகள் பல மடங்காக இருக்கும் என்பதினால் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக அடி எடுத்து வைக்கிறார். ஏனென்றால் இதில் கொஞ்சம் சருக்கினாலும் இவருடைய கேரியர் மொத்தமும் காலியாகி விடும். அதற்காக இவர் புது முயற்சியை எடுத்திருக்கிறார். என்னவென்றால் தலைவருக்காக ரெடி பண்ண கதையை இவருடன் நெருங்கிய நண்பர்களாக இருக்கும் இயக்குனர்களுடன் டிஸ்கஸ் பண்ண போகிறார்.

அவர்கள் யார் என்றால் கௌதம் மேனன், வெங்கட் பிரபு, வெற்றிமாறன், கமல், மணிரத்தினம், கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், அட்லி இவர்களை சந்தித்து கதையை கூறி அவர்களுடைய ஆலோசனையை கேட்டு அதற்கு ஏற்ற மாதிரி படத்தை எடுக்கப் போகிறார். ஏனென்றால் லியோ படத்தின் விமர்சனத்தினால் ரொம்பவே பயந்து போய் இருக்கிறார்.

அதனால் தான் செய்த தவறை புரிந்து கொண்டு மறுபடியும் நடக்காத அளவிற்கு கவனமாக பார்த்துக் கொள்ளப் போகிறார். என்ன தான் இந்த ஒரு விஷயம் வித்தியாசமாக இருந்தாலும் எந்த ஒரு பெரிய டைரக்டரும் இதுவரை செய்யாத புது முயற்சியை லோகேஷ் எடுக்கிறார் என்பது நினைக்கும்போது பாராட்டக்கூடிய விஷயமாக இருக்கிறது. இவருடைய முயற்சிக்கு கண்டிப்பாக தலைவர் 171 படம் வெற்றி அடையும்.

Also read: லோகேஷ் கனகராஜ் இப்படிப்பட்டவரா!. இதுக்குதாம்பா சூப்பர் ஸ்டாரே வாய்ப்பு கொடுத்துருக்காரு