வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஜெயிலரை முந்திட்டு லியோ போகணும், அதுக்கு இவ்வளவு பித்தலாட்டமா.? அருவருப்பாஇல்லையா, கிழித்தெறிந்த சவுக்கு

Leo Moive Controversy: நாளை மறுநாள் ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் லியோ படத்திற்கு நாலாபுறத்திலிருந்தும் பிரச்சனைகள் கிளம்புகிறது. இதனால் இப்போது தளபதி ரசிகர்களுக்கு படம் ரிலீஸ் ஆகுமா இல்லையா என்ற பீதியில் இருக்கின்றனர். உண்மையில் லியோ படத்திற்கு என்னதான் நடக்கிறது, இந்த படத்திற்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்பதை சவுக்கு சங்கர் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக போட்டுடைத்து உள்ளார்.

லியோ படத்திற்கு எந்த அரசியல் அழுத்தமும் கொடுக்கல, சொன்ன தேதிக்கு படமும் ரிலீஸ் ஆகி விடும். இவ்வளவு பிரச்சனை லியோ படத்திற்கு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர் லலித்துக்கும் விஜய்க்கும் இருக்கிற பேராசை தான். விஜய்யை பொறுத்தவரை ரஜினியின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்பதுதான். அப்படி நடக்க வேண்டும் என்றால் லியோ படத்தின் மீதான ஹைப்பை அதிகப்படுத்தனும். அதற்காகத்தான் இந்த பித்தலாட்ட வேலைகளை எல்லாம் செய்கின்றனர்.

இதுவரை ஏதாவது ஒரு படத்தின் ட்ரைலரை திரையரங்கில் ரிலீஸ் செய்திருக்கிறார்களா, வேண்டுமானால் இடைவெளியில் படத்தின் ட்ரைலரை ரிலீஸ் செய்வார்கள். ஆனால் முதல்முறையாக லியோ படத்தின் ட்ரைலரை மட்டுமே தியேட்டரில் தனியாக ரிலீஸ் செய்தார்கள். இதற்காக ரசிகர்களையும் வரவைத்து வெறியேற்றி உட்காரும் சீட்டை கிழித்து அலப்பறை செய்தார்கள்.

தளபதியின் ரசிகர்கள் தான் ரோஹினி தியேட்டரையே அடித்து நாசம் செய்திருக்கின்றனர். இதுவரை அது குறித்து ஒரு கண்டனத்தை கூட விஜய்யிடம் இருந்து வரல. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் பாதுகாப்பை காரணம் காட்டி ரத்து செய்யும்படி செய்துவிட்டனர். இப்படி ஒவ்வொரு பிரச்சனையாக லியோ படத்திற்கு வந்தால் தான், அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கு என்பதை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்கில் குவிவார்கள். அதன் மூலம் கல்லா கட்டி விடலாம் என்பதுதான் இவர்களது திட்டம்.

தற்போது நடக்கும் பிரச்சினைகளை எல்லாம் விஜய் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு ட்ரெய்லருக்கே இவ்வளவு பரபரப்பு என்றால் படம் எவ்வளவு பரபரப்பு ஏற்படுத்தும் என்பதற்காகவே அதிகாலைக் காட்சி வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று அதற்கான வேலைகளை எல்லாம் பார்க்கிறார்கள்.

இதெல்லாம் பார்க்கும்போது எரிச்சலா இருக்கு. உங்களுக்கெல்லாம் அருவருப்பா இல்லையா! எங்க பாத்தாலும் லியோ படத்தோட பேச்சு தான். வேற பிரச்சனையே தமிழ்நாட்டில இல்லையா என்று சவுக்கு சங்கர் சமீபத்திய பேட்டியில் கிழித்து தொங்க விட்டிருக்கிறார். மொத்தத்தில் விஜய் தான் கொளுத்திப் போட்டு குளிர் காய்கிறார் என்பதை அடித்து சொல்கிறார்.

- Advertisement -

Trending News