லியோ வெற்றி விழாவில் உங்களுக்கு வச்சிருக்கேன்.. விஜய் பேசப்போகும் அரசியல்

Actor Vijay- Leo Movie: நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவருடைய குட்டி ஸ்டோரியை கேட்பதற்கு உற்சாகமாக ரெடியாகி விட்டார்கள். லியோ படத்தின் வெற்றி விழா நவம்பர் ஒன்றாம் தேதி நடக்க இருக்கிறது. லியோ படத்திற்கு வெற்றி விழா நடக்கப் போகிறது என அரசல் புரசலாக செய்தி வந்து கொண்டிருந்த நேரத்தில், தற்போது அந்த விழா நடத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என காவல்துறை ஒப்புதல் அளித்து விஷயத்தை உறுதிப்படுத்திவிட்டது.

சமீப காலமாகவே விஜய் படங்களுக்கு வெற்றி விழா என்று பெரிதாக ஏதும் நடந்தது கிடையாது. படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலக்சன் மட்டும்தான் வெளிவரும். அப்படி இருக்கும் பொழுது லியோ படத்திற்கு வெற்றி விழா கொண்டாடுவது என்பது விஜய்யின் தனிப்பட்ட ஆசை தான். இசை வெளியீட்டு விழா இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியதற்கு லியோ வெற்றி விழாவை ட்ரீட்டாக கொடுக்க இருக்கிறார்.

அதுவும் லியோ படத்தின் வெற்றி விழாவை சாதாரணமாக கொண்டாட விஜய் விரும்பவில்லை. பெரிய அளவில் கோலாகலமாக நேரு ஸ்டேடியத்தில் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார். விஜய் எப்போதுமே தன்னுடைய படங்களுக்கு பெரிய அளவில் வெற்றி விழா கொண்டாடாத நிலையில் லியோ படத்திற்கு கொண்டாடுவது அரசியலுக்காகத்தான்.

லியோ வெற்றி விழாவின் எதிர்பார்ப்பு

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தடை விதித்ததற்கு பதிலடியாக தான் இந்த வெற்றி விழா இருக்கப் போகிறது. தன்னுடைய வழக்கமான குட்டி ஸ்டோரியை தாண்டி, விஜய் இந்த படத்தின் வெற்றி விழாவில் தன்னுடைய கோபத்தை மொத்தமாக கர்ஜிக்க இருக்கிறார். இதனாலேயே லியோ படத்தின் வெற்றி விழா பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்தின் வெற்றி விழா என்பதை தாண்டி இந்த மேடை விஜய்க்கு அரசியல் மாநாடாக அமைய இருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் அடுத்த நகர்வு அரசியல் தான் என தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது. விஜய் சமீபத்தில், தேர்தல் நடவடிக்கைகளின் அடுத்த கட்ட நகர்வாக பூத் கமிட்டி போடும் அளவு முன்னேறி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

லியோ வெற்றி விழா விஜய்க்கு மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லியோ படத்தின் வெற்றியை மட்டும் கொண்டாடாமல் அந்த படத்திற்கு எதிராக வந்த நெகட்டிவ் கமெண்ட்களை பற்றியும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்