பிறந்தநாளுக்கு அடுத்தடுத்து மிரட்ட உள்ள லியோ படத்தின் அப்டேட்.. தளபதியுடன் கொண்டாடும் திரையுலகம்

Thalapathy Vijay Birthday: தளபதி விஜய் நாளை தன்னுடைய 49 வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இந்த மாதம் தொடங்கியதில் இருந்தே விஜய் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளுக்காக சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களை வைரலாக்கி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் சார்பில் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை பல்வேறு திட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன. எப்பவும் போல அன்னதானம், ரத்த தானம், வழிபாடு என பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு இந்த வருட பிறந்த நாளின் மிகப்பெரிய ட்ரீட் என்றால் அது லியோ திரைப்படம் தான். விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இணைந்தது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்தது. மேலும் அடுத்தடுத்த அப்டேட்கள் என்று இந்த வருடம் முழுவதும் விஜய் அவருடைய ரசிகர்களை லியோ மோடில் வைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read:அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்ட விஜய்.. பதறிப் போய் கூட்டணி போட வந்த முக்கிய கட்சிகள்

இந்த வருட பிறந்த நாளின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் அவருடைய அரசியல் நகர்வு தான். சமீபத்தில் விஜய் நடத்திய கல்வி விருது வழங்கும் விழா இந்திய அளவில் மிகப்பெரிய ட்ரெண்டானது. அடுத்த விஜய் அரசியலுக்கு வருவார் என்று பலரும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். அதற்கேற்றவாறு லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ‘நா ரெடி’ பாடலின் ப்ரோமோ அரசியல் கேள்விகளுக்கெல்லாம் விஜய் பதில் சொல்வது போல் அமைந்திருக்கிறது.

தற்போது விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த அப்டேட் ஆக ‘நான் ரெடி’ பாடலின் முழு வீடியோ இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு படத்தின் பர்ஸ்ட் லுக்கும் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் லியோ படத்தின் இரண்டாவது லுக் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

Also Read:சிவகார்த்திகேயன் படத்திற்கு மட்டும் விதிவிலக்கா?. விஜய் படத்திற்கு எழுந்த பிரச்சனை

இந்த அறிவிப்புகள் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் அதை மேலும் அதிகரித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்போது அடுத்தடுத்து வரவிருக்கும் இரண்டு அப்டேட்டுகள் தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய பிறந்த நாளை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் கொண்டாட காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நிறைய முன்னணி ஹீரோக்கள் இரண்டு, மூன்று தினங்களாகவே விஜய் பிறந்தநாளுக்காக தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் நிறைய பகிர்வுகளை பகிர்ந்து வருகிறார்கள். மேலும் விஜய் பிறந்தநாள் முன்னிட்டு நிறைய போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read:வாய்ப்பு மட்டும் தாங்க என்ன வேணாலும் செய்கிறேன்.. பார்ட்டி பார்ட்டியாக செல்லும் தளபதி பட நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்