லலித்தின் பேராசையால் சுக்குநூறாகும் லியோ வசூல்.. 80% கேட்டு கம்முனு இருக்கும் தளபதி

Leo Movie: தளபதி விஜய் நடித்த லியோ படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இறங்கி இருக்கிறார். மேலும் படத்தின் ப்ரீ புக்கிங் ஆரம்பித்துவிட்டது. லியோ படத்திற்கு அதிகாலை காட்சி அனுமதி கேட்டு தயாரிப்பாளர் லலித் உயர் நீதிமன்றம் வரை சென்றிருந்தார். ஆனால் அவருடைய முயற்சியை தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

லியோ படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் தொடங்கி விட்டதாக அறிவிப்புகள் வெளியானாலும், இதுவரை 70% தியேட்டர்களில் அட்வான்ஸ் புக்கிங் ஓபன் ஆகவில்லை. இதனால் படத்தின் ரிலீஸுக்கு ஏதாவது பிரச்சனையா, படம் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா ஆகாதா என விஜய் ரசிகர்கள் தலையை பிச்சுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது.

படத்தின் வியாபாரம் என்பது, தயாரிப்பாளர்களிடம் இருந்து, விநியோகஸ்தர்களுக்கும், அவர்களிடமிருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இருக்கும். தயாரிப்பாளர் எதிர்பார்க்கும் தொகையை கொடுத்துவிட்டு விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கி விடுவார்கள். விநியோகஸ்தர்களிடமிருந்து, திரையரங்குகளுக்கு நேரடியாக படம் சென்று விடும். இதுதான் இதுவரை சினிமாவில் நடந்து வரும் பிசினஸ்.

ஆனால் லியோ படத்தில் இது தலைகீழாக நடந்து வருகிறது. பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் முதல் வாரத்தின் வசூல் எப்படியும் பெரிய அளவில் இருக்கும். இதில் தான் போட்ட பணத்தை எடுக்கும் வியாபாரமும் நடக்கும். அப்படி இருக்கும் பொழுது புதிய பிசினஸ் ஆக தயாரிப்பாளர் லலித், திரையரங்கு உரிமையாளர்களிடம் முதல் வாரத்தில் வசூலில் 80 சதவீதம் ஷேர் கேட்டு இருக்கிறார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைக்கவில்லை.

இந்த பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியாகவே இருக்கிறது. இதனால் தான் பல தியேட்டர்களில் லியோ படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பிக்கப்படவில்லை. லியோ படத்தின் டிக்கெட் 2500 லிருந்து 3000 வரையும் விற்கிறது என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். இந்த படத்தின் மூலம் எப்படியாவது வசூலை அள்ளிவிடலாம் என ஒரு பக்கம் திரையரங்கு உரிமையாளர்கள் போராடிக் கொண்டிருக்க, அவர்களுக்கு ஆப் அடிக்கும் விதமாக லலித் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.

பெங்களூர் மற்றும் இதர மாநிலங்களில் லியோ படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பித்துவிட்டது. இதனால் தமிழ் ரசிகர்கள் குழப்பத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய படத்திற்கு இப்படி ஒரு பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது என விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு தெரியுமா இல்லையா என தெரியவில்லை. அப்படி தெரியும் பட்சத்தில் இவர்களில் இறங்கி இந்த பஞ்சாயத்தை முடித்து வைக்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்