வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

1000 கோடிக்கு முதல் படியை எடுத்து வைத்த லியோ.. தலை சுற்ற வைக்கும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Leo First Day Collection: லோகேஷ், விஜய் கூட்டணியின் லியோ நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஏற்கனவே தரமான ஒரு வெற்றியை ருசித்து இருந்த இவர்களின் மேஜிக் இப்போதும் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். படம் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பரவினாலும் வசூலில் மாஸ் காட்டி இருக்கிறது லியோ.

இதன் மூலம் நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என இந்த கூட்டணி கெத்து காட்டி வருகிறது. ஏற்கனவே இப்படம் சர்வதேச அளவில் ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே அதற்கான முதல் படியை எடுத்து வைத்திருக்கிறது. அது மட்டும் இன்றி தமிழ் சினிமாவின் பல சாதனைகளை உடைத்த பெருமையும் லியோவுக்கு வந்திருக்கிறது.

திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்ததாலயே இப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு கொஞ்சமும் குறை வைக்காமல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் லியோ தற்போது உலக அளவில் 145 கோடி வரை வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அதன்படி தமிழ்நாட்டில் மட்டுமே 35 கோடி வரை வசூல் ஆகி இருக்கிறது. அதை தொடர்ந்து விஜய்க்கு அதிகபட்ச ரசிகர்கள் இருக்கும் கேரளாவில் 11 கோடியும் கர்நாடகாவில் 14 கோடியும் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் 15 கோடியும் கலெக்சன் ஆகியுள்ளது. இது தவிர மற்ற மாநிலங்களில் நான்கு கோடி வரை வசூல் பெற்றிருக்கிறது.

இதை வைத்து பார்க்கும் பொழுது இந்திய அளவில் மட்டுமே லியோ 75 கோடி வரை வசூலித்து ஒட்டு மொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அது மட்டுமின்றி இதன் ஓவர் சீஸ் வசூல் 70 கோடியாக இருக்கிறது. ஆக மொத்தம் 145 கோடியை முதல் நாளிலேயே அசால்ட்டாக தட்டி தூக்கியிருக்கிறது விஜய், லோகேஷ் கூட்டணி.

இது அடுத்தடுத்த நாட்களில் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால் ஆயுத பூஜை விடுமுறை தொடர்ச்சியாக வருவதால் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் தற்போது அதிகமாகவே இருக்கிறது. அந்த வகையில் லியோவின் அலப்பறை ஆரவாரமாக தொடங்கி இருக்கும் நிலையில் விரைவில் ஆயிரம் கோடி இலக்கை அது எட்டி விடும் என கணிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

Trending News