Jailer vs Leo: கடந்த சில வருடங்களாக வெளியான விஜய் படங்களுக்கு இல்லாத அளவுக்கு லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அந்த படங்களை எல்லாம் விஜய் சோலோவாக வெளியிட்டு பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக இருந்தார். ஆனால் இப்போது நிலைமையே வேறு என்று ஆகிவிட்டது. அஜித் vs விஜய் என்ற காலமெல்லாம் போய் இப்போது ரஜினி vs விஜய் என்று ஆகிவிட்டது.
சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் தமிழ் சினிமாவில் இதுவரை செய்யாத பல சாதனைகளை செய்து விட்டது. எனவே இதன் அழுத்தம் லியோ படத்திற்கு அதிகமாகவே இருக்கிறது. எப்படியாவது லியோ, ஜெயிலர் சாதனையை முறியடித்து விட வேண்டும் என விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு ஏற்றது போல் லியோ டீமும் வேலை செய்து வருகிறது.
போட்ட உழைப்பிற்கு கை மேல் பலனாக இப்போது விஜய்யின் பக்கம் வெற்றிக்காத்து வீசிக்கொண்டிருக்கிறது. லியோ படத்தின் வெற்றி இப்போது அமெரிக்காவில் இருந்து ஆரம்பமாகி இருக்கிறது. இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத அளவிற்கு லியோ படத்திற்கு ஃப்ரீ புக்கிங் சேல்ஸ் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதை அமெரிக்க விநியோகஸ்தர்கள் கூட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் லியோ படத்தின் பிரீ சேல்ஸ் அமெரிக்காவில் $500K என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது. விஜயயின் நடிப்பில் இந்த படத்திற்கு முன்பு ரிலீஸ் ஆன வாரிசு படம் $147K தான் ப்ரீ சேல்ஸில் பெற்றது. இப்போது லியோ படம் $842K தாண்டி விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி விட்டன. இது விஜய்யின் பீஸ்ட் படத்தை விட அதிகம்.
ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் லியோ படத்தின் பிரீ சேல்ஸ் 1 மில்லியனை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்துவிட்டால் அமெரிக்காவில் பிரி சேல்ஸில் ஜெயிலர் படத்தை ஜெயித்து விடும் லியோ. ஏனென்றால் ஜெயிலர் படம் அதன் பிரீ சேல்சில $948k தான் பெற்றது இப்போது ஒரு சில எண்களே இந்த இரண்டு படங்களுக்கும் வித்தியாசமாக இருக்கிறது.
இதுவரை அமெரிக்காவில் ரிலீசான தமிழ் படங்களில் பிரீ ரிலீசில் 1 மில்லியனை கடந்த படங்கள் என்றால் அது கபாலி மற்றும் பொன்னியின் செல்வன் தான். கபாலி படம் $1.92 மில்லியன், பொன்னியின் செல்வன் முதல் பாகம் $1.05 மில்லியன் பெற்றிருந்தது. லியோ படம் விரைவில் 1 மில்லியனை தொட இருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களின் சாதனைகளை முறியடிக்கிறதா என பார்ப்போம்.