சொந்த காசு போட்டு படம் எடுத்துட்டு நாங்க பிச்சை எடுக்கணுமா.? லியோவை அதிர வைத்த தியேட்டர் ஓனர்

Leo-Vijay: விஜய்யின் லியோ படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் கிட்டத்தட்ட 460 கோடியை தாண்டி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஒருபுறம் லியோ ஸ்கேம் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதாவது லியோவின் வசூலில் படக்குழு தரப்பிலிருந்து பித்தலாட்டம் நடந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது.

இந்த சூழலில் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது ஜெயிலர் படத்தின் வசூலை லியோ முந்த முடியாது என்று ஒரு பதிவு போட்டிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து பேசிய அவர் இதற்கு முன்னதாக விஜய்யின் நடிப்பில் வெளியான புலி மற்றும் பீஸ்ட் படங்களும் தியேட்டர் ஓனர்களுக்கு நஷ்டத்தை தான் தந்தது.

அதேபோல் தான் லியோ படமும் நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் லோகேஷ் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு தான். முதல் பாதி நன்றாக எடுத்திருந்தாலும் இரண்டாம் பாதியில் மொத்தமாக சொதப்பிவிட்டார். மேலும் லியோ படம் வெளியான முதல் நாள் நல்ல வசூலை பெற்றது என்பது உண்மைதான்.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பெரிய அடியை வசூலில் லியோ படம் பெற்றது. மேலும் இதனால் பாதிப்படைவது தியேட்டர் ஓனர்கள் தான். ஏனென்றால் லலித்தை வைத்து தனது சொந்த காசை போட்டு தான் விஜய் இந்த படத்தை எடுத்திருக்கிறார். தங்களது ஹீரோ அந்தஸ்துகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிக வசூல் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகின்றனர்.

லியோ படம் தொடங்கப்பட்ட முதல் நாளில் இருந்து காஷ்மீரில் படக்குழுவை ஜுரம் வந்தது போல் லலித் வைத்திருந்தார். ஆகையால் இதுவே படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமும் லலித் தான். மேலும் ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது என்பதை லியோ படம் நிரூபித்து உள்ளதாக தியேட்டர் ஓனர் கூறி இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற இடங்களில் லியோ படம் அதிக வசூல் செய்ததாக கூறி வருகிறார்கள். ஆனால் அதெல்லாம் சும்மா கண் துடைப்புக்காக சொல்லி வருகிறார்கள். சொல்லப்போனால் லியோ படத்தால் இப்போது மிகுந்த நஷ்டத்தை சந்தித்து இருப்பது திரையரங்கு உரிமையாளர்கள் தான் என்று பிரபலம் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்