வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

லியோவால் வெறிச்சோடி காணப்படும் தியேட்டர்.. மாஸ் ஹீரோவின் மார்க்கெட்டை காலி செய்யும் விஜய்

Leo-Vijay: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் லியோ. இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது லியோ படம். இதற்கு காரணம் விஜய், லோகேஷ் கூட்டணி என்றாலும் படத்திற்கு ரிலீசுக்கு முன்பே சில சர்ச்சைகளும் சூழ்ந்து கொண்டது.

அதிலும் குறிப்பாக லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காதது படத்திற்கு ப்ரமோஷன் ஆக அமைந்துவிட்டது. அப்படி என்றால் லியோ படத்தின் மீது உள்ள பயத்தால் தான் இவ்வாறு நெருக்கடியை கொடுக்கிறார்கள் என்று அதுவும் படத்திற்கு சாதகமாகவே அமைந்து விட்டது. மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக திரையரங்குகள் லியோ படத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதுவும் தமிழ் சினிமாவை தாண்டி மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் கூட குறையவில்லை. படத்துடன் மாஸ் ஹீரோ ஒருவரின் படமும் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பாலகிருஷ்ணா. இவருடைய படங்கள் எல்லாமே அங்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து வரும்.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு படம் வெளியான போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் வீரசிமா ரெட்டி படம் வெளியானது. அப்போது இவருடைய படம் முதல் நாள் கலெக்ஷன் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் இருந்தது. ஆனால் இப்போது லியோ படத்துடன் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீலிலா, சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் தெலுங்கில் பாலகிருஷ்ணா படத்தை விட லியோ படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பகவந்த் கேசரி படத்திற்கு கூட்டம் குறைவாகத்தான் இருக்கிறது.

இதற்கு காரணம் தெலுங்கு சினிமாவிலும் லியோ படத்தின் மீது தான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். வாரிசு படம் வெளியான போது கூட பாலகிருஷ்ணா படத்திற்கு சென்ற ரசிகர்கள் இப்போது லியோ படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். இதனால் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் மார்க்கெட்டை லியோ படத்தின் மூலம் விஜய் காலி செய்து உள்ளார்.

- Advertisement -

Trending News