ஜவானை விட லியோவுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு.. பொன்னியின் செல்வனில் என்ட்ரி கொடுத்த விஜய்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி மந்தமான வசூலை பெற்று வருகிறது. ஏனென்றால் முதல் பாகத்திற்கு கிடைத்த அளவுக்கு இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.

அதுமட்டுமல்ல பொன்னியின் செல்வன் படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போது, இடைவெளியில் விஜய்யின் லியோ படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை திரையிட்டுள்ளனர். இதை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் பலரும் ஆரவாரத்துடன் கத்தி கூச்சல் போட்டுள்ளனர்.

Also Read: பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை விட வசூலில் மண்ணைக் கவ்விய 2ம் பாகம்.. வருந்தும் மணிரத்னம்

இந்த சத்தம் பொன்னியின் செல்வன் 2 படம் ஓடிக் கொண்டிருக்கும் போது கூட கேட்கவில்லை. ஆனால் லியோ படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை பார்த்தபின் அப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கிடைக்கிறதாம். இது தமிழகத்தில் மட்டுமல்ல ஹிந்தி ரசிகர்களிடமும் லியோவின் ப்ரோமோ வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

சொல்லப்போனால் ஜவான் படத்தை விட விஜய்யின் லியோ படத்தை தான் ஹிந்தி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதுவும் பொன்னியின் செல்வனில் என்ட்ரி கொடுத்த விஜய்யை பார்த்து அவ்வளவு சந்தோஷப்படுகின்றனர்.

Also Read: மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் பொன்னியின் செல்வன்.. பாகுபலி விட ஆயிரம் மடங்கு ஸ்பெஷல் ஏன் தெரியுமா?

எனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியா படமாக உருவாகிக் கொண்டிருக்கும் லியோ படத்தை மட்டும் சரியான முறையில் ப்ரமோஷன் செய்தால் நிச்சயம் இந்திய அளவில் தாறுமாறாக வசூலை குவிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் அந்த அளவிற்கு மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் பொன்னியின் செல்வன் படத்திற்கு இடையே திரையிடப்பட்ட லியோ படத்தின் ப்ரோமோஷன் வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே அக்டோபர் 19ஆம் தேதி லியோ படம் ரிலீஸ் ஆகுவதாக அறிவிக்கப்பட்டதால், உலக அளவில் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கும் விஜய்யின் கேரியரில் லியோ தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கிறது.

Also Read: சம்பாதிப்பதற்கு மட்டும் தான் தமிழ்நாடு.. சென்னையில் இருக்க கூடாது என மகனை தொந்தரவு செய்யும் பொன்னியின் செல்வன் நடிகர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்