ரஜினியின் மோசமான பிளாப் படத்தோடு ஒப்பிடப்படும் லியோ.. மறைமுக தயாரிப்பாளர் விஜய்க்கு வரும் பேராபத்து

Rajini Vs Vijay Leo: 20 சதவிகித மக்களை வைத்துக்கொண்டு படம் ஓட்ட முடியாது .லியோ படத்தால் எங்களுக்கு பெரும் நஷ்டம் என தியேட்டர் உரிமையாளர்கள் போர் கொடி தூக்கி வருகின்றனர். இது பெரிய பட்ஜெட் விஜய் படம் இதனால் எங்களுக்கு லாபம் கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து விட்டோம். இதற்கு நிச்சயமாக தயாரிப்பாளர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என ஆர்ப்பரித்து வருகின்றனர்.

பொதுவாக விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வாங்கி தியேட்டர்களுக்கு கொடுக்கும் போது 60% தங்களுக்கும், மீதமுள்ள 40% திரையரங்குகளுக்கும் கொடுப்பார்கள். இது பெரிய பட்ஜெட் படம், தயாரிப்பாளர் நிறைய பணத்தை இந்த படத்தில் இறக்கி உள்ளார் அதனால் தியேட்டர்களுக்கு 40% கொடுக்க முடியாது என்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை முடிவில் 25 சதவீதம் தியேட்டருக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் ஆகி உள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட்டில் நமக்கு லாபம் இல்லாவிட்டாலும், கேண்டீன்,கார், பைக் பார்க்கிங் மூலம் விட்ட காசை பிடித்து விடலாம் என மனக்கணக்கு போட்டனர்.

ஆனால் முதல் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் 20 சதவீதம் மக்கள்தான் திரையரங்குக்கு வந்துள்ளனர். அது மட்டும் இன்றி அரசாங்கம் இரவு ஒரு மணியோடு 5 காட்சிகளையும் நிறுத்தி விட வேண்டும் என ஆணை பிறப்பித்ததால் இண்டர்வல் நேரம் கம்மியானது. இதனால் மக்களும் இல்லாமல் கேண்டின் வருமானமும் இல்லாமல் திரையரங்குகள் மோசமான நஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்பொழுது திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என லலித் மற்றும் விஜய்க்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த படத்திற்கு லலித் முழுமையான தயாரிப்பாளர் இல்லை என்றும் விஜய் தான் ஒரிஜினல் தயாரிப்பாளர் என்றும் கூறி வருகின்றனர். இதனால் விஜய் தான் இந்த நஷ்டத்தை ஈடுகெட்ட போகிறார் என்பது மறைமுகமான செய்தி.

இதே போல் தான் 2014 இல் வெளிவந்த ரஜினியின் லிங்கா படமும் சரிவை சந்தித்தது. அந்த நேரத்தில் இந்த படத்தை ஒரு பெரும் தொகையை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கினார்கள். ஆனால் படம் மோசமான வசூலை பெற்றது. இதனால் அப்பொழுது இந்த நஷ்டத்தை ரஜினிகாந்த் ஒரு பெரும் தொகையை கொடுத்து சரி செய்தார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்