ஏத்துக்க மனசு இல்லாட்டாலும் அதுதான் உண்மை.. லியோ படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்ததன் காரணம்

இரண்டாவது நாளாக தொடர்ந்து எதிர்மறை விமர்சனங்களையே பெற்று வருகிறது லியோ படம். ஒரு பக்கம் லோகேஷ், எனக்கு கலெக்ஷன் முக்கியம் இல்லை ரசிகர்களை திருப்திப்படுத்தினால் போதும் என்று பேட்டி கொடுத்து வருகிறார். ஆனால் இந்த படத்தில் முழுமையாக ரசிகர்களை திருப்தி பண்ணவில்லை என்பதுதான் உண்மை.

ரஜினி படமாகவே இருந்தாலும் ஒரு படம் ஜவ்வாக இழுப்பதற்கு முக்கிய காரணம் படத்தின் நேரம். இந்த படம் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ஓடுகிறது. இதுதான் படம் லேக் ஆவதற்கு காரணம் என்கிறார்கள். தேவையில்லாத நிறைய காட்சிகளை உள்பகுதி இருக்கிறார் லோகேஷ்.

இதற்கு முன்னர் லோகேஷ் எடுத்த மாநகரம், கைதி படங்கள் எல்லாம் இரண்டு முதல் இரண்டே கால் மணி நேரம் மட்டுமே தான்.அதை இந்த படத்தில் செய்ய தவறி இருக்கிறார் ஷோகேஸ் கனகராஜ். இந்த படத்தை முழுக்க முழுக்க தனி மனிதனாகத்தான் ப்ரோமொட் செய்து வந்தார்.

முதல் நாளில் இந்த படத்தை பார்த்தவர்கள் 90சதவீதம் பேர் விஜய் ரசிகர்கள் தான். அதனால் முதல் நாள் ரிப்போர்ட்டை இந்த படத்திற்கு காதில் வாங்கவே கூடாது. ஒரு காமன் ஆடியன்ஸுக்கு இந்த படம் பிடிக்குமா என்பது பெரிய சந்தேகம் தான். குறிப்பாக பெண்கள் மத்தியில் இந்த படம் எடுபடாது.

லோகேஷ் மாதிரி ஒரு இயக்குனர் இந்த படத்தில் நரபலி என்னும் ஒரு டாபிக்கை கொண்டு வந்ததை முக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியாததாக பார்க்கப்படுகிறது. அதுவும் சொந்த மகளையே கொல்லும் அளவிற்கு இருக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் மோசமான கற்பனையாக உள்ளது.

எல்லாரும் எதிர்பார்த்தபடி இந்த படத்திற்கு எல் சி யு தேவையே இல்லை. மக்கள் மனதில் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் பதிய வேண்டும் என்பதுதான் அவரின் எண்ணமாக இருந்தது தவிர இது கதைக்கு தேவையானது இல்லை என்பதை கோட்டை விட்டுவிட்டார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்