ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

துப்பாக்கி பட மொத்த வசூலை முதல் நாளே அள்ள போகும் லியோ வசூல்.. கழுகின் சாதனையை முறியடிப்பாரா விஜய்?

Vijay-Leo: விஜய்யின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமாக அமைந்த படங்களில் துப்பாக்கியும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் 2012 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் வெளியானது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

அதற்கு முன்னதாக எந்த படங்களும் செய்யாத அளவுக்கு துப்பாக்கி படம் வசூல் செய்த சாதனை படைத்திருந்தது. கிட்டத்தட்ட 125 கோடி வசூல் செய்திருந்தது. இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு விஜய் லியோ படமும் இதே போன்ற ஒரு சாதனை நிகழ்த்த இருக்கிறது. அதாவது நாளைய தினம் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் லியோ படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

அதுவும் விஜய் ரசிகர்களுக்கு நாளைக்கு தான் தீபாவளி என்பது போல விழா கோலம் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் லியோ படத்தின் முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு இருக்கும் என்பது தோராயமாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற இடத்தை ஜெயிலர் பிடித்திருக்கிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 650 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் லியோ படம் முதல் நாளில் 115 கோடியில் இருந்து 125 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் துப்பாக்கி வசூலை முதல் நாளே லியோ படம் அள்ள இருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் கடந்த பத்து வருடங்களில் விஜய்யின் வளர்ச்சியை பாட்டு பிரமிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பிரச்சனை வந்தால் தான் முன்னேறி கொண்டிருக்கிறோம் என்று விஜய் சொன்னதற்கு ஏற்ப இப்போது லியோ படம் ரிலீஸ் ஆகவே பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார்.

அதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாக லியோ பட வசூல் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் விஜய் இப்போது தளபதி 68 படபிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அந்தப் படத்தையும் முழு வீச்சாக படப்பிடிப்பு நடத்தி அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியிட திட்டமிட்டுள்ளனர். இனி விஜய்யின் கொடி தான் தமிழ் சினிமாவில் ஓங்கி பறக்க இருக்கிறது.

- Advertisement -

Trending News