லோகேஷ் ஆசையில் மண் அள்ளி போடும் விஜய்.. நானே ராஜா நானே மந்திரி என ஈகோவில் தளபதி போடும் ஆட்டம்

Leo Audio Launch: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் லியோ படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு, தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது லியோ படத்தின் ரிலீஸ் மற்றும், அதன் இசை வெளியீட்டு விழாவை தான்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு, எப்போது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என விஜய் ரசிகர்கள் தவமாய் தவம் கிடக்கிறார்கள். இந்த ஆடியோ லாஞ்சில் விஜய் என்ன பேசுவார், சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பதில் சொல்வாரா என்ற பெரிய எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால் இந்த இசை வெளியீட்டு விழாவை பற்றிய அப்டேட்டுகள் மட்டும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது.

Also Read:ரத்தமும் சதையுமாக ஒட்டி வரும் விஜய், அட்லீ.. இவங்க அலப்பறை கொஞ்சம் ஓவராக தான் போகுது போல

லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடக்க இருக்கிறது, சென்னை அல்லது மதுரையில் நடக்க இருக்கிறது என அவ்வப்போது வதந்திகளாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய் தான் என்ற செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.

லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இசை வெளியீட்டு விழாவை ரொம்பவும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறதாம். மேலும் சினிமாவில் தனக்கு பிடித்த, தான் குருவாக மதிக்கும் உலக நாயகன் கமலஹாசன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டும் என்பது அவரின் கனவாகவும் இருக்கிறதாம்.

Also Read:விஜய்யை பகைத்துக் கொண்ட லைக்கா.. 9 வருட பகையை முடிவுக்கு கொண்டு வந்த சுபாஸ்கரன்

ஆனால் விஜய்யின் இதற்கு முந்தைய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர் என்று யாருமே வந்தது கிடையாது. படத்தை சம்பந்தப்பட்டவர்கள் மட்டும்தான் விழாவில் கலந்து கொள்வார்கள். மற்றும் விஜய் கடைசியாக வந்து பேசும் நிகழ்வு தான் அந்த ஆடியோ லான்ஜின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும்.

இப்படி இருக்கும் பட்சத்தில் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக வந்தால், விஜய்யின் பேச்சுக்கு ஹைப் குறைந்து விடும் என விஜய் நினைப்பதால், ஒரு நிகழ்வில் இரண்டு ஸ்டார்கள் இருந்தால் எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்று கூறி விஜய், கமலஹாசன் வருவதே வேண்டாம் என்று சொல்லி வருகிறாராம். இதுதான் ஆடியோ லான்ச் இழுபறியாக போய்க்கொண்டிருப்பதற்கு காரணம் என்று கூட சொல்லப்படுகிறது.

Also Read:இயக்குனர் ஆகி அப்பாவுக்கே ஷாக் கொடுத்த ஜேசன் சஞ்சய்.. ஆனாலும் விஜய் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல

- Advertisement -