விட்ட மார்க்கெட்டை பிடிக்க ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரை களமிறங்கும் சிம்பு.. வேற லெவலில் வெளிவந்த அப்டேட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் தற்போது மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் சண்டைக் காட்சி ஒன்றை பிரபல ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் லீ விட்டேகர் இயக்கியுள்ளார். மும்பையில் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ள லீ விட்டேகர் இதுகுறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “நேற்றிரவு மும்பையில் நடந்த படப்பிடிப்போடு முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. கெளதம் மேனனோடு அதீத திறமை வாய்ந்த நடிகர்களோடும், இந்த சிறப்பான குழுவோடும் பணியாற்றியது அற்புதமான, நேர்மறை சிந்தனையூட்டும் அனுபவமாக இருந்தது. இந்த இனிய மனிதர்களுடன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ளேன். மிக்க நன்றி” என கூறியுள்ளார்.

லீ விட்டேகர் ஹாலிவுட்டில் பிரபலமான பாஸ்ட் அண்ட ஃபுரியஸ்-5, தி ஸ்பை நெக்ஸ்ட் டோர் உள்ளிட்ட படங்களில் சண்டை காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். இதுதவிர தமிழில் விஸ்வரூபம், ஆரம்பம் மற்றும் பாகுபலி உள்ளிட்ட படங்களிலும் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளார்.

lee-whittaker
lee-whittaker

சிம்பு மற்றும் கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் என்பதால் வெந்து தணிந்தது காடு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் இப்படத்தில் இணைந்துள்ளது படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்