பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர்களின் பெயர்களை குழப்பி அடித்த எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவரான மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது வேட்பாளர்களின் பெயரை மாற்றி மாற்றி சொல்லி  உலறியதாக சொல்லப்படுகிறது.

அதாவது சேலம் மாவட்டம் வீரபாண்டி மற்றும் ஏற்காடு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரான ஸ்டாலின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார். அப்போது கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஸ்டாலின், வேட்பாளர்கள் இருந்த மேடையில் ஏறாமல் தனியாக வேனில் இருந்தபடியே  பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கே இருந்த திமுக தொண்டர்களிடையே உரையாற்றிய ஸ்டாலின், பிரச்சாரத்தை நிறைவு செய்யும்போது முன்னாள் அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகம் பற்றி புகழ்ந்து பேசி இருக்கிறார். ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின்  மகன்களான வீரபாண்டி ராஜா மற்றும் பிரபு ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என்று  பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், முதலில் வீரபாண்டியாரின் நேரடி வாரிசுதாரர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் வீரப்பாண்டி ஆதரவாளர்கள் விரக்தியில் இருந்தனராம்.

ஆனால்  பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின் தற்போது வீரபாண்டியார் குடும்பத்திற்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் அந்த வேட்பாளரின் பெயரை ஸ்டாலின் மறந்து விட்டாராம். அதுமட்டுமில்லாமல் வேட்பாளர்களின் பெயர் என்ன என்று அருகில் இருந்தவரிடம் கேட்டிருக்கிறார் ஸ்டாலின். அவ்வாறு கேட்ட பிறகும் அவரது பெயரை மாற்றி மாற்றி கூறியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

அதேபோல் வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் தருண் என்பதற்கு பதிலாக வருண் என்று ஸ்டாலின் கூறியதாலும், ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக தமிழரசன் என்று கூறியதாலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தலைவரின் தவற்றை சுட்டிக் காட்ட முடியாமல் அங்கிருந்த நிர்வாகிகளும் வேட்பாளர்களும்  தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் பெற்ற வரத்தின் போது இவ்வாறு பல காமெடிகளை செய்துவருவது இணையத்தில் பேசு பொருளாக மாறி இருப்பதோடு, இது பிரச்சாரமா இல்ல காமெடி ஷோவா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

- Advertisement -