ருத்ரன் படத்தை ஓட வைக்க கொட்டிக் கொடுக்கும் லாரன்ஸ்.. புது சர்ச்சையில் சிக்கிய மாஸ்டர்

சோசியல் மீடியாவை திறந்தாலே ருத்ரன் திரைப்படம் பற்றிய பேச்சு தான் அதிகமாக இருக்கிறது. லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் நாளை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது. கதிரேசன் இயக்கியுள்ள இப்படத்தில் சரத்குமார், ப்ரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. அதில் ராகவா லாரன்ஸ் செய்த ஒரு விஷயம் தான் தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அதாவது அந்த விழா மேடையில் அவர் விஜய் டிவியின் பாலாவுக்கு 10 லட்சம் நன்கொடை கொடுத்தார். எதற்காக என்றால் பாலா தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தின் மூலம் ஏழை குழந்தைகள் படிப்பதற்கான உதவியை செய்து வருகிறார்.

Also read: சைலன்டா சம்பளத்தை உயர்த்திய லாரன்ஸ்.. ருத்ரன் படத்திற்கு இவ்வளவு சம்பளமா?

ஏற்கனவே இது பற்றி பல செய்திகள் வெளிவந்து பாலாவின் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் லாரன்ஸும் அதை பாராட்டி தன் சார்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அந்த பணத்தை பாலாவிடம் தன் அம்மா மூலமாக கொடுத்தார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாலா சட்டென்று மாஸ்டரின் காலில் விழுந்து தன் நன்றியை தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல் அந்த மேடையிலேயே லாரன்ஸ் 150 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு படிப்பு கொடுக்கப் போவதாகவும் தெரிவித்தார். இது ஒரு புறம் பாராட்டுகளை பெற்று வந்தாலும் மறுபுறம் பல விமர்சனங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் ருத்ரன் திரைப்படத்தை ஓட வைப்பதற்காக தான் இப்படி ஒரு பிரமோஷன் நடக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read: தமிழ் வருட பிறப்புக்கு வெளியாகும் 8 படங்கள்.. லாரன்ஸ்க்கு போட்டியாக வரும் விஜய் ஆண்டனி

லாரன்ஸ் இயல்பிலேயே பலருக்கும் உதவக் கூடியவர் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் அவர் அதை எதற்காக மேடையில் பகிரங்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குழந்தைகளை வைத்து இப்படி ஒரு பிரமோஷன் படத்திற்கு தேவைதானா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் ருத்ரன் ரிலீஸ் நெருங்கிவிட்ட நிலையில் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பி இருப்பது படக்குழுவினரை சற்று ஆட்டம் காண வைத்துள்ளது. இருப்பினும் இதுவும் படத்திற்கான ஒரு இலவச விளம்பரம் தான் என்று அவர்கள் மனதை திடப்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் நாளை வெளியாக உள்ள இப்படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவரும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: விஜய் சேதுபதி இடத்தை பிடித்த ராகவா லாரன்ஸ்.. கையில் இத்தனை படங்களா?

- Advertisement -