அரசியலுக்கு வந்தால் தான் உதவி செய்யணும் இல்லை.. நடிகராக கூட இருந்து உதவலாம் என்று நிரூபித்த லாரன்ஸ்

தமிழ் புத்தாண்டு அன்று லாரன்ஸ் நடித்து திரையரங்களில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ருத்ரன். இதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வசூலை கூட எடுக்க முடியாமல் இருக்கிறார்கள். இதனை அடுத்து பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகி வருகிறது. இப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட முடிவு செய்துள்ளனர்.

இப்படம் ரஜினிக்கு எந்த அளவுக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்ததோ அதே மாதிரி லாரன்ஸ்க்கு சினிமா கேரியரில் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஆக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்து வெற்றி படமான ஜிகர்தண்டாவின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவராக லாரன்ஸ் மாறிவிட்டார்.

Also read: சைலன்டா சம்பளத்தை உயர்த்திய லாரன்ஸ்.. ருத்ரன் படத்திற்கு இவ்வளவு சம்பளமா?

இவர் என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும் இவருடைய உண்மையான கேரக்டர் என்னவென்றால் யாராவது உதவி என்று கேட்டால் அதற்கு முடிந்தவரை இவரால் என்ன செய்ய முடியுமோ அதை செய்துவிட்டு தான் மற்ற வேலையை பார்க்கக் கூடியவர். அதை கொஞ்சம் கூட மாறாமல் தற்போதும் கடைப்பிடித்து வருகிறார். நிறைய குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை படிக்க வைத்து வருகிறார். அதே மாதிரி விஜய் டிவி பாலாவும் சில குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்கிறார்.

அடுத்ததாக சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் லாரன்ஸ் நடித்த ருத்ரன் பட ஆடியோ லாஞ்சிக்கு தொகுப்பாளராக பாலா வந்தார். இவர் வாங்குகிற சம்பளத்துக்கு பெரிய அளவில் பண்ண முடியாததால் அந்த குழந்தைகள் எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்று லாரன்ஸிடம் கூறியிருக்கிறார். உடனே லாரன்ஸ் இதை நான் கண்டிப்பாக மேடையில் சொல்லியே ஆக வேண்டும் நான் வாங்குற சம்பளத்துக்கு நான் குழந்தைகளை படிக்க வைக்கிறேன் என்றால் அது வேற விஷயம்.

Also read: ருத்ரன் பார்ட் 2 வேறயா?. முடியல சாமி என பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

ஆனால் பாலா அவரால் முடிந்தவரை 25 குழந்தைகளை படிக்க வைக்கிறார் என்பது மிகப் பெரிய விஷயமாக நான் பார்க்கிறேன். அதற்கு என்னால் முடிந்த உதவி 10 லட்சம் ரூபாய் செக்கை நான் இப்பொழுது கொடுக்கிறேன் என்று சொல்லி லாரன்ஸ் அம்மா மற்றும் தம்பியை மேடைக்கு அழைத்து அவர்கள் மூலமாக பாலாவுக்கு கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் இதே மாதிரி குழந்தைகளை படிக்க வைப்பதற்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் எப்பொழுது வேணாலும் நீங்கள் என்னிடம் கேட்கலாம் நான் அண்ணனாக இருந்து உங்களுக்கு உதவி செய்வேன் என்று கூறியிருக்கிறார்.

அத்துடன் எப்பொழுதுமே இவருடைய உதவியாளரிடம் ஒரு செக் புக் கொடுத்து வைத்திருப்பார். எதற்கென்றால் யாராவது உண்மையாகவே உதவி என்று கேட்டால் உடனே அந்தத் தொகையை செக்கில் எழுதி கொடுத்து விடுவாராம். இந்த மாதிரி ஒரு நடிகரை இதுவரை பார்த்ததில்லை. சில நடிகர்கள் உதவி செய்வார்கள் ஆனால் இவரை மாதிரி செக் புக்கை போகும் இடத்துக்கெல்லாம் கையில் கொண்டு போயிட்டு உதவி செய்ய மாட்டார்கள். சில பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைடன் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நிஜத்தில் இந்த அளவுக்கு உதவி செய்ய முன்வருவதில்லை. நடிகராக கூட இருந்து உதவி செய்யலாம் என்று நிரூபித்திருக்கிறார் லாரன்ஸ்.

Also read: 1500 தியேட்டர்களில் வெளியான ருத்ரன்.. கல்லா கட்டியதா.? முதல் நாள் வசூல் இதுதான்

- Advertisement -