இணையத்தில் லீக்கான மாநாடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.. கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது  முன்னணி நடிகராக இருப்பவர் தான் சிம்பு. அதேபோல் சிம்புவும் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இயக்குனர், கதாசிரியர், நடிகர், பாடகர் என பன்முகத் திறமையை வெளி காட்டியதால் இவர் சினிமா சினிமா உலகில் முக்கிய இடத்தைப் பிடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவை அனைத்தும் பொய்த்துப் போகும் வகையில் சிம்பு பல சர்ச்சைகளில் சிக்கியதால், சிம்புவின் மவுசு மங்கியது. அதேபோல் சிம்புவும் வயதுக்கு மீறிய உடல் தோற்றத்தைக் கொண்டிருந்ததால், பட வாய்ப்புகளை இழந்தார். இதனால் சிம்புவை காட்டிலும் அவருடைய ரசிகர்கள்  கவலையில் தத்தளித்து வந்தனர்.

சமீபத்தில் சிம்பு தன்னுடைய ரசிகர்களுக்காக தனது உடல் எடையை  பெருமளவு குறைத்து, மாஸாக சினிமா வாழ்க்கையில் தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார். மேலும் பொங்கலன்று சிம்புவின் நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படம் அவருடைய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் ‘மாநாடு’ படத்தின்  ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது  இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து முடிந்த கையோடு, ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Simbu
Simbu

இந்நிலையில் தற்போது சிம்பு மாநாடு படத்தில் பங்கேற்று கொண்டிருந்தபோது, எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இந்தப் புகைப்படத்தில் சிம்பு செம்ம மாஸாக இருக்கிறார். இந்த புகைப்படம் சிம்புவின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

simbu-str
simbu-str
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்