மூன்றே வயது தான் வித்தியாசம், ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்த பிரபலம்.. தேடி கண்டுபிடித்த நெட்டிசன்கள்

மலையாள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர் நடிகை குலப்புள்ளி லீலா. இவர் பெரும்பாலும் நகைச்சுவை காட்சிகளில் அதிகம் நடித்துள்ளார்.

தமிழில் சில திரைப் படங்களில் நடித்திருந்தாலும் விஷால் நடிப்பில் வெளியான மருது திரைப்படமே இவரை அதிக பிரபலம் ஆக்கியது. அந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் மாஸ்டர், அரண்மனை 3, நாச்சியார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் குலப்புள்ளி லீலா நடித்துள்ளார். அதில் அவர் ரஜினிகாந்துக்கு அப்பத்தாவாக நடித்து உள்ளார். இதில் என்ன விசேஷம் என்றால் 67 வயதான குலப்புள்ளி லீலா 70 வயதான ரஜினிக்கு அப்பத்தாவாக நடித்தது தான் .

இதை உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் அதுதான் உண்மை. நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 12 1950 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். குலப்புள்ளி லீலா ஏப்ரல் 19 1954 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் மூன்று வருடங்கள் ஆகும்.

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்திருப்பது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்த பாட்டி கதாபாத்திரம் மற்றும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் பின்னாளில் அவருக்கே அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டாருக்கு மகளாக நடித்த மீனா பின்னர் அவருக்கு ஜோடியாக நடித்தார். யாருக்குத் தெரியும் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் மீனா அவருக்கு அம்மாவாக கூட நடிக்க வாய்ப்பு இருக்கிறது.

rajini-annaatthe
rajini-annaatthe
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்