லியோ எதிர்பார்த்த வசூல் வராததால் லோகேஷை சுத்தலில் விட்ட லலித்.. சம்பள பாக்கியால் வெடித்த சர்ச்சை

Lokesh Kanagaraj: லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் இவர்களது காம்போவில் லியோ படம் உருவாகி இருந்தது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் இதுவரை இல்லாத அளவுக்கு லியோ படத்தின் எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது.

இதற்கு ஒரு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் தான். இந்த சூழலில் எதிர்பார்த்த அளவு லியோ படம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. ஆனால் ஆயிரம் கோடி வசூல் எதிர்பார்த்த நிலையில் லியோ அந்த வசூலை பெறவில்லை. இந்நிலையில் லியோ படத்தில் யோகேஷுக்கு சம்பள பாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது விக்ரம் படம் வரை குறைந்த சம்பளம் பெற்ற லோகேஷுக்கு அதன் பிறகு லியோ படத்திற்கு 50 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இந்நிலையில் படம் ஆரம்பித்ததில் இருந்தே அட்வான்ஸ், படப்பிடிப்பு நடக்கும் போது என குறிப்பிட்ட தொகையை கொடுத்திருக்கின்றனர்.

Also Read : முதலாளியாக புது அவதாரம் எடுக்கும் லோகேஷ்.. ரோலக்ஸ் ஸ்கார்பியோ உடன் வெளிவந்த அறிக்கை

மேலும் லோகேஷ் சொன்னதை விட பட்ஜெட் அதிகமாக போனதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் லோகேஷ் மற்றும் லலித் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அதன்பிறகு பாதி படத்தை லோகேஷின் உதவியாளர் ரத்னகுமார் தான் எடுத்தாராம்.

இந்நிலையில் லோகேஷுக்கு தற்போது வரை சம்பளத்தில் 5 கோடி பாக்கியை லலித் வைத்துள்ளாராம். லலித்திடம் செய்தியாளர்கள் இடம் இதுகுறித்து கேட்கும் போது நேரடியாக லோகேஷ் இதைப் பற்றி கேட்டால் நான் பதில் சொல்வதாக குறிப்பிட்டார். ஆனால் லோகேஷ் தற்போது வரை இதுகுறித்து எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை.

Also Read : ஒரே நாளில் நடக்கும் நிகழ்வை படமாக்கி வெற்றிகண்ட 5 இயக்குனர்கள்.. லோகேஷ் இதுல ஸ்பெஷலிஸ்ட்!