ஒரிஜினல் போஸ்டர்ன்னு சொல்ல மாட்டீங்களா.. லால் சலாம் ரஜினியை வச்சு செய்த ப்ளூ சட்டை

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் அதை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

இவருடைய கதாபாத்திரம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்று உற்சாகமாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த போஸ்டர் மிகவும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த போஸ்டரில் ரஜினியின் கெட்டப்பை பார்த்த நெட்டிசன்கள் சரமாரியாக பங்கம் செய்து வருகிறார்கள். அதிலும் இது என்ன பிரியாணி கடைக்கு விளம்பரமா செய்றாங்க. அதுக்காக ரெடி பண்ண போஸ்டர் போட்ட மாதிரி இருக்கு என்று கண்ணா பின்னான்னு கலாய்த்து வருகிறார்கள்.

Also read: தொப்பி வாப்பாவாக மாறிய சூப்பர் ஸ்டார்.. லால் சலாம் போஸ்டரை பங்கம் செய்த நெட்டிசன்கள்

அத்துடன் ப்ளூ சட்டை மாறன் இந்த போஸ்டர் பார்த்து ஏன்டா இது ஒரிஜினல் போஸ்டர்ன்னு சொல்ல மாட்டீங்களா. ரெண்டு நாளா இது எவனோ ட்ரோல் பண்றதுக்கு போட்டது என்று நினைத்து போயிட்டே இருக்கேன். போஸ்டர் கூட தலைவர் தேற மாட்டார் போல இவனுங்க எதை நம்பி படத்தை எடுக்குறாங்க தெரியவில்லையே என்று தாறுமாறாக ட்விட்டரில் பதிவிட்டு ரஜினியை வச்சு செய்கிறார்.

அத்துடன் இவருடைய ரசிகர்களும் இதுவரை என் தலைவர் சேர்த்து வச்ச மொத்த இமேஜையும் டேமேஜ் பண்ற மாதிரி அவருடைய மகள் இப்படி தேரில் இழுத்து தெருவில் விட்ட கதையாக என் தலைவரை அசிங்கப்படுத்தி விட்டாங்களே என்று ஆதங்கத்தில் கொந்தளித்து வருகிறார்கள்.

Also read: லால் சலாம் படத்திற்கு சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம்.. கெஸ்ட் ரோலுக்கு இத்தனை கோடியா!

இது என்ன என் தலைவருக்கு வந்த சோதனை இதெல்லாம் பார்க்கணும்னு தலையெழுத்தா அதிலும் அவருடைய போஸ்டரை பார்க்கும்போது பிட்டு பிட்டா அங்கங்க எடிட்டிங் பண்ணி இருக்கீங்களே. எப்படி இருந்த என் தலைவர் இப்படி ஆயிட்டாரே என்று சொல்வதற்கு ஏற்ப அவருடைய போஸ்டர் இருக்கிறது. அதிலும் சும்மா மெல்லுகிற வாய்க்கு அவள் கிடைத்தது போல ஏற்கனவே இவரை கமல் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இப்பொழுது இந்த போஸ்டரை பார்த்த உடனே அவர்கள் பேசுவது தான் எங்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதிலும் இந்த போஸ்டரில் ரஜினி வாயை பார்த்து கோண வாய குமரேசா என்றெல்லாம் நக்கல் அடித்து வருகிறார்கள். ரஜினியை வச்சு நல்லா செஞ்சுட்டாங்க அவருடைய பொண்ணு. ஒருவேளை ஐஸ்வர்யாவிடம் இருக்கும் இந்த டேலண்ட் பார்த்து பயந்து தான் தனுஷ் தள்ளி வந்துட்டாரு போல.

லால் சலாம் ரஜினியை வச்சு செய்த ப்ளூ சட்டை

lalsalam-cinemapettai

Also read: ரஜினி மகளுடன் சண்டையா?. லால் சலாம் படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்

- Advertisement -