ரஜினியால் விற்ற லால் சலாம்.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

Lal Salaam : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிப்பில் லால் சலாம் படம் வெளியாகி இருந்தது. இதில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. போட்ட பட்ஜெட்டை கூட இந்த படத்தால் எடுக்க முடியவில்லை. ஆகையால் லைக்கா நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து இருந்தது.

மேலும் ஓடிடி மூலமாகவது ஓரளவு லாபத்தை பெறலாம் என்று நினைத்திருந்தனர். ஆனால் தியேட்டரிலேயே இந்த படம் பெரிய அளவில் ஓடாத காரணத்தினால் ஓடிடி நிறுவனங்கள் இப்படத்தை வாங்க தயக்கம் காட்டி வந்தனர். இப்போது ரஜினியால் லால் சலாம் படம் விற்று உள்ளது.

லால் சலாம் படத்தை கைப்பற்றிய சன் நெக்ஸ்ட்

அதாவது ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்திருந்தது. இந்தப் படம் பல மடங்கு லாபத்தை வாரிக் கொடுத்தது. அடுத்ததாக லோகேஷ் மற்றும் ரஜினி நடிப்பில் உருவாகும் தலைவர் 171 படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது.

இதனால் சன் பிக்சர்ஸ் இடம் லால் சலாம் படத்தை வாங்க ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார். ஆகையால் சன் நெக்ஸ்ட் லால் சலாம் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கி இருக்கிறது. அதோடு சன் டிவியிலும் லால் சலாம் படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகிறது.

திரையரங்குகளில் வெளியாகி மிகக் குறுகிய காலத்திலேயே ரஜினி படம் தொலைக்காட்சியில் வருவது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனாலும் தியேட்டரில் இப்படத்தை தவறவிட்டவர்கள் விரைவில் சன் தொலைக்காட்சி பார்க்கலாம். அதோடு சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஏப்ரல் பதினைந்தாம் தேதி லால் சலாம் வெளியாகிறது.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய சினிமா செய்திகள்