கோடியிலிருந்து லட்சத்திற்கு சரிந்த லால் சலாம் 8வது நாள் வசூல்.. கலக்கத்தில் லைக்கா

Lal Salaam 8th Day Collection : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக லால் சலாம் படத்தில் என்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தை லைக்கா தயாரித்த நிலையில் ரஜினியை கேமியோ தோற்றத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற கண்டிஷன் வைத்தனர். எப்படியோ ரஜினி சம்மதிக்க வைத்த மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா நடிக்க வைத்தார்.

மேலும் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். ஒரு வாரமாக கோடிகளில் கலெக்ஷன் செய்து வந்த லால் சலாம் திடீரென லட்சங்களாக சரிந்திருக்கிறது. அந்த வகையில் எட்டாவது நாள் முடிவில் இந்தியா முழுவதும் வெறும் 27 லட்சம் மட்டுமே வசூலை ஈட்டி இருக்கிறது.

ஏழாவது நாள் வியாழக்கிழமை 92 லட்சமும், அதற்கு முன்னதாக புதன்கிழமை 1.21 கோடியும் வசூல் செய்திருந்தது. லால் சலாம் படம் வெளியான முதல் நாளில் கிட்டதட்ட 3.55 கோடி வசூல் செய்தது. இப்போது ஒரே வாரத்தில் திடீரென 27 லட்சம் மட்டுமே வசூல் செய்தது படக்குழுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Also Read : ரஜினி, கமல் சேர்ந்து ஐந்து ஸ்டார்கள் உடன் நடித்த நடிகை.. 50 ஃப்ளாப் கொடுத்த சோகம்

மேலும் அடுத்த அடுத்த வாரங்களில் புது வரவாக நிறைய படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே லாம் சலாம் படத்துடன் வெளியான லவ்வர் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். போக்குறைக்கு இந்த வாரம் ஜெயம் ரவியின் சைரன் படமும் வெளியாகி சக்கை போடு போடுகிறது.

ஆகையால் இனி போட்ட பட்ஜெட்டை லால் சலாம் படம் எடுக்குமா என்பதே சந்தேகம் தான். எனவே லைக்கா தயாரிப்பு நிறுவனம் இப்போது கலக்கத்தில் இருக்கிறது. ஐஸ்வர்யாவின் 3 மற்றும் வை ராஜா வை படங்கள் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில் அந்த லிஸ்டில் லால் சலாம் படம் இணையாமல் இருந்தால் சரி தான்.

Also Read : லாரன்ஸ்- ரஜினி போட்ட ஒப்பந்தம்.. மகள்களுக்காக ஆலமரம் போல் நிற்கும் தலைவர்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை