பவர்ஸ்டாரின் கண்ணம் உரசும் வனிதா.. மரண கலாய் கலாய்த்த லட்சுமி ராமகிருஷ்ணன்

வனிதா விஜயகுமார் தன்னுடைய பெயரை சர்ச்சை விஜயகுமார் என மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு வனிதா எங்கு சென்றாலும் சர்ச்சையாகவே உள்ளது. முன்னதாக மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அடுத்த சில மாதங்களிலேயே அவரை விரட்டி விட்டார்.

அது அவரது சொந்த பிரச்சனை என விட்டுவிடாமல் சில நடிகைகள் வனிதாவின் மூன்றாவது திருமணத்தை கேலி செய்ய வந்தது பாரு கோபம். நேரலை என்று கூட பார்க்கவில்லையே. போடி வாடி என கண்டபடி பேசிவிட்டார் வனிதா.

எப்போதுமே சர்ச்சையான ஆட்களை தேடி தேடிப் பிடிப்பதில் விஜய் டிவியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை களமிறங்கி நல்ல டிஆர்பி பார்த்தது.

வனிதா தான் இப்போதைக்கு நம்முடைய டிஆர்பி என்பதை உணர்ந்து கொண்ட விஜய் டிவி தொடர்ந்து வனிதாவுக்கு தன்னுடைய சேனலில் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதில் அவருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு பஞ்சாயத்து ஏற்பட்டது.

ரம்யா கிருஷ்ணன் சர்ச்சைக்கு முன்னாடியே வைரலானது லட்சுமி ராமகிருஷ்ணன் சர்ச்சை. ஒரு பொது பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணனை போடி, வாடி என மரியாதை இல்லாமல் பேசி வம்புக்கு இழுத்தார் வனிதா விஜயகுமார்.

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் ரசிகர் ஒருவர் வனிதா மற்றும் பவர்ஸ்டார் இருவரும் கன்னத்தோடு கன்னம் ஒட்டிக்கொண்டு வெளியிட்ட புகைப்படத்தை ஷேர் செய்து கருத்து கேட்டுள்ளார். அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன், கண்களில் நீர் வரும் அளவுக்கு சிரிக்கும் ஏமோஜியை பகிர்ந்து கிண்டலடித்துள்ளார்.

lakshmi-ramakrishnan-comment
lakshmi-ramakrishnan-comment
- Advertisement -