ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மார்க்கெட் இல்லாததால் லோ பட்ஜெட் ஹீரோவுடன் இணைந்த நயன்தாரா.. யாரும் எதிர்பாராத கூட்டணி

நடிகை நயன்தாரா கைவசம் எக்கச்சக்க முன்னணி ஹீரோக்களின் படங்களை வைத்துக்கொண்டு படு பிசியான கால் சீட்டுடன் வேலை செய்து கொண்டிருந்த நடிகை. மார்க்கெட் நன்றாக இருக்கும்போதே கடந்த வருடம் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவருக்கும் அழகான இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றன.

திருமணம் ஆனாலே நடிகைகளின் மார்க்கெட் குறைந்து விடும் என்பது நயன்தாரா விஷயத்திலும் உண்மை என்று ஆகிவிட்டது. திருமணத்திற்கு பிறகு இவர் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே படம் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் ஜவான் தான். அதுவும் இவர் திருமணத்திற்கு முன்பே ஒப்பந்தமான திரைப்படம். இன்றுவரை நயனுக்கு புது பட அப்டேட்டுகள் எதுவும் இல்லை.

Also Read: குருவை மிஞ்சிய சிஷ்யன்.. ரஜினியை முந்தி தயாரிப்பாளருக்காக ஓடி வந்த ராகவா லாரன்ஸ்

சமீபத்தில் அடுத்தடுத்து தளபதி விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் தங்களுடைய புது படங்களை தொடங்கி இருக்கிறார்கள். அதிலும் நயன்தாராவுக்கு வாய்ப்பு அமையவில்லை. கிட்டத்தட்ட நயன்தாரா தற்போது மார்க்கெட் இழந்த நடிகையாக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . சமீபத்தில் ரிலீசான கனெக்ட் திரைப்படமும் இவருக்கு வெற்றியை தரவில்லை.

இந்த நேரத்தில் தான் நயன்தாராவின் புது படம் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா யாரும் எதிர்பார்க்காத ஒரு ஹீரோவுடன் ஜோடியாக இருக்கிறார். நடன இயக்குனரிலிருந்து நடிகராக மாறிய ராகவா லாரன்ஸ் தான் அந்த ஹீரோ. பொதுவாக ராகவா லாரன்ஸ் படங்களில் புதுமுக நடிகைகள், ஒன்று இரண்டு படங்களில் தலை காட்டிய நடிகைகள் தான் நடிப்பார்கள்.

Also Read: குழந்தைகளை நெஞ்சோடு அணைத்தபடி வந்த நயன்-விக்கி.. ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

அப்படி இருக்கும்போது தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ஜோடி சேர இருப்பது என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி தான். மார்க்கெட்டில் இழந்ததால் நயன்தாரா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. வழக்கம் போல ராகவா லாரன்ஸுக்கு இந்த படமும் திகில் திரைப்படம் ஆக தான் அமைந்திருக்கிறது.

நடிகர் வைபவ் இயக்கத்தில் மேயாத மான் என்னும் திரைப்படத்தை இயக்கிய ரத்னம் தான் இந்த படத்தின் இயக்குனர் ஆவார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது தான் தெரியும்.

Also Read: நயன்தாரா, சமந்தா எல்லாம் பின்ன போங்க.. சைலன்டாக வளர்ந்து வரும் சீரியல் நடிகை

- Advertisement -

Trending News