வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கடைசிவரை ஏங்க வைத்த கேவி ஆனந்த்.. கேள்விக்குறியான 3 படங்கள்

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கேவி ஆனந்த் 2005 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த், பிரித்விராஜ், கோபிகா நடிப்பில் வெளியான கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு வெளியான அயன் படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.

இவர் இயக்குனர் ஆவதற்கு முன்பே இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இதனால் இவருக்கு 1995 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இயக்கிய 3 படங்கள் நிச்சயம் 2ம் பாகம் வரும் ரசிகர்களை நம்ப வைத்திருக்கிறார்.

அயன்: இவரது இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான அதிரடி த்ரில்லர் படமான இந்த படத்தில் சூர்யா, பிரபு, தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். போதைப்பொருள் கடத்தல், வைரம், தங்க பிஸ்கட் கடத்தல் போன்றவற்றை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் முக்கியமான வில்லனை அழிக்காமல் கிளைமாக்ஸில் அயன்2 வருவது போலவே காட்டியிருப்பார்.

கோ: இதில் ஜீவா கதாநாயகனாக புகைப்படக்கலைஞர் மற்றும் ஊடகவியலாளராக காட்டப் பட்டிருப்பார். இந்தப் படத்தின் இயக்குனரான கேவி ஆனந்த் கிளைமாக்ஸில் வில்லன் அஜ்மல் ஒரு கும்பலுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி நாட்டு மக்களை ஏமாற்றி முதல் அமைச்சர் ஆகிவிடுவார். ஆனால் அந்த சதிகார கும்பல் எப்படி தோன்றியது என்பது பற்றிய முழு விவரமும் இயக்குனர் இந்தப்படத்தில் காட்டப்படாததால் 2ம் பாகம் வரும் என பலரும் எதிர்பார்த்தனர்.

மாற்றான்: சூர்யா இந்தப் படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்திருப்பார். 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கிய கேவி ஆனந்த், இந்தப்படத்தில் பால் பவுடரில் கலப்படம் செய்திருக்கும் தந்தையையே சூர்யா கொள்வது போல் காட்டியிருப்பார். ஆனால் முக்கியமான காட்சிகள் சிலவை விரிவாக காட்டப்படுவதால் இந்தப் படத்தின் 2ம் பாகம் வரும் என ரசிகர்கள் இன்றுவரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த 3 படங்களையும் செகண்ட் பார்ட் எடுக்கும் முனைப்பில் தான் இருந்துள்ளார் கே வி ஆனந்த். படத்தின் கிளைமாக்ஸ்காட்சியிலும் அடுத்த பார்ட் வருவது போல் தான் காண்பித்து இருப்பார். ஆனால் தற்போது வரை இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறார்.

- Advertisement -

Trending News