கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பால் இறந்ததற்கு காரணம் இதுதானா? சார், நீங்க இத பத்தி எல்லாம் கவலைப்படலாமா?

தமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 3 மணிக்கு மரணமடைந்த செய்தி கோலிவுட் சினிமாவில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கே வி ஆனந்த் பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கியவர். அதன் பிறகு முன்னணி இயக்குனர்களின் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

ஒளிப்பதிவாளர்கள் பலரும் இயக்குனராவது ஒன்றும் புதிதல்ல. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நேரடியாக படம் இயக்க வந்தவர்களை விட ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாக மாறி பெரிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் அயன், கோ போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்த கேவி ஆனந்தின் இயக்கத்தில் வெளியான கடைசி சில படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக எப்படியாவது ஒரு பெரிய வெற்றிப்படம் கொடுத்து விட வேண்டும் என தன்னைத் தானே மன அழுத்தத்திற்கு உட்படுத்தி கொண்டாராம்.

தற்போது கூட அடுத்த படத்திற்கான கதையை ராப்பகலாக எழுதி வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக வரவேண்டும் என தன்னை தானே சிரமப்படுத்திக் கொண்டால் தான் அவரது மாரடைப்புக்குக் காரணம் எனவும் கூறுகின்றனர்.

சினிமாவில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். அதற்காக இப்படியா செய்வது என கோலிவுட் வட்டாரம் இடிந்து போயுள்ளது. குறைவான பட்ஜெட்டில் நிறைவான படம் கொடுக்கும் இயக்குனர்களில் கேவி ஆனந்த் முக்கியமானவர் என்பது மறுக்க முடியாத ஒன்று.

kv-anand-cinemapettai-01
kv-anand-cinemapettai-01

Next Story

- Advertisement -