இயக்குனரின் மகனை நம்பி முதல் போட்ட KS ரவிக்குமார்.. நாட்டாமையுடன் இணையும் விஜய்

KS Ravikumar is producing the film based on director Vikraman’s son: தமிழ் சினிமாவின் மேக்சிமம் கேரன்டி இயக்குனர் என்றால் அவர் கே எஸ் ரவிக்குமார் தான்.

தயாரிப்பாளரின் முதலுக்கு பங்கம் வராமல் கொடுத்த காசில் நிறைவாய் படமெடுத்து, வசூலையும் வாரி வழங்கி குவித்து விடும் இவரது படங்கள்.

90 களின் காலகட்டத்தில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனராக காதல், கல்யாணம், கலாட்டா,ஆக்சன், நகைச்சுவை என எதையும் விட்டு வைக்காது  தனது படங்களில் அனைத்தையும் சுவாரசியத்துடன் பகிர்ந்து அளித்தவர் கே எஸ் ரவிக்குமார்.

ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு முத்து, படையப்பா, தசாவதாரம் போன்ற பிரம்மாண்ட வெற்றி கொடுத்த கே எஸ் ரவிக்குமார்.

சமீப காலமாக இயக்கத்திற்கு சற்று ஓய்வு கொடுத்து நடிப்பில் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்த தனது நண்பர் பூவே உனக்காக புகழ் விக்கிரமனின் மகன் விஜய் கனிஷ்காவை வைத்து படம் தயாரிக்க உள்ளார் கே எஸ் ரவிக்குமார். 

ஏற்கனவே கமலஹாசனின் தெனாலி மற்றும் 2022 ஆண்டு வெளிவந்த கூகுள் குட்டப்பா போன்ற படங்களை கே எஸ் ரவிக்குமார் தயாரித்தது குறிப்பிடத்தக்கது

கே எஸ் ரவிக்குமாரின் தயாரிப்பில் நடிகராகும் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா

KS ரவிக்குமாரின் தயாரிப்பில் சூரியக்கதிர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹிட் லிஸ்ட் என்ற இத்திரைப்படத்தில்,

Vikraman son vijay kanishka

விஜய் கனிஷ்கா உடன் சரத்குமார்,சித்தாரா, முனிஸ் காந்த், சமுத்திரகனி,ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

படத்தின் போஸ்டரை தனுஷ் வெளியிட அமர்க்களம் ஆனது இந்த ஹிட் லிஸ்ட். 

போஸ்டர் வெளியீட்டு விழாவில்  பல முன்னணி  தயாரிப்பாளர்கள் ஆர்பி சவுத்ரி, சுரேஷ் காமாட்சி, சத்திய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், தேனப்பன், எழில் என பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களான கே எஸ் ரவிக்குமாரின் பங்களிப்போடு விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா இப்படத்தில் அறிமுகமாவது பலரையும் எதிர்பார்க்க வைத்து உள்ளது.

தற்போது படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்ததை ஒட்டி கோடை விடுமுறையை  கருத்தில் கொண்டு ஹிட் லிஸ்ட் திரைப்படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக தகவல் தெரிவித்துள்ளனர் படக் குழுவினர்.

Sharing Is Caring:

Leave a Comment

அதிகம் படித்தவை