கே எஸ் ரவிக்குமாரின் 12 படத்தில் ஹீரோவாக நடித்த ஒரே நடிகர் இவர்தான்.. ரஜினி கமலை விட ஒஸ்தியாம்!

தமிழ் சினிமாவில் பக்கா கமர்சியல் இயக்குனர் என பெயர் எடுத்தவர் தான் கேஎஸ் ரவிக்குமார். ஒரு காலகட்டத்தில் கேஎஸ் ரவிக்குமார் படம் என்றாலே தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக படை எடுத்துச் செல்வார்கள்.

ஏன் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் கேஎஸ் ரவிக்குமாருக்கு முக்கிய இடம் உண்டு.

ஆனால் அவர்களை விட கேஎஸ் ரவிக்குமாருடன் மிகவும் நெருக்கமாக பழகிய நடிகர் வேறு ஒருவர் உள்ளார். அவருடன் இணைந்து கேஎஸ் ரவிக்குமார் கிட்டத்தட்ட 12 படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. நம்ம சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான்.

வில்லனாக கலக்கி கொண்டிருந்தவரை பாசிட்டிவ் கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோவாக மாற்றியவர் தான் கேஎஸ் ரவிக்குமார். சரத்குமார் முதல் முதலில் பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த சேரன் பாண்டியன் படத்தை இயக்கியவர் கே எஸ் ரவிக்குமார்.

அதன் பிறகு கேஎஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமார் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. கேஎஸ் ரவிக்குமாரின் முதல் படமான புரியாத புதிர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சரத்குமார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, பேண்டு மாஸ்டர், நாட்டாமை, நட்புக்காக, பாட்டாளி, சமுத்திரம், பாறை, ஜக்குபாய் போன்ற படங்களில் பணியாற்றினார்.

sarathkumar-ks-ravikumar-cinemapettai
sarathkumar-ks-ravikumar-cinemapettai

மேலும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் சரத்குமார். இவர்கள் கூட்டணியில் உருவான படங்களில் ஒரு சில படங்களே தோல்விப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -