ரெண்டே படத்தினால் காணாமல் போன கேஎஸ் ரவிக்குமார்.. ரூட்டை மாத்தி கண்டுக்காத ரஜினி

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இயக்குனர் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் தான். இவர் இயக்கிய அனைத்து படங்களுமே தொடர்ந்து வெற்றி பெற்றன. அதுவும் இவர் கமல், ரஜினி படங்களை தான் அதிகளவில் இயக்கி உள்ளார். அந்த சமயத்தில் இவர் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன், முத்து, படையப்பா, அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தெனாலி, மின்சார கண்ணா என பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார்.

இப்படி ஒரு உச்ச இயக்குனராக வலம் வந்த கே.எஸ்.ரவிக்குமார் இறுதியாக கூட ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தை இயக்கி இருந்தார். இப்படம் நல்ல வசூல் பெற்றது. ஆனால் படத்தை தயாரித்தவர்களே வெளியிடாமல் பல கை மாறி படம் வெளியானதால் தியேட்டருக்கு வந்த போது படத்தின் விலை பல மடங்கு உயர்ந்து ஒரு சிலருக்கு நஷ்டத்தை கொடுத்தது.

அந்த சமயத்தில் தொடர்ந்து லிங்கா, கோச்சடையான் என ரஜினியின் படங்கள் தோல்வி அடைந்ததால், ரஜினி கபாலி, காலா என அவர் ரூட்டை மாற்றி பயணம் செய்ய தொடங்கினார். அதன் பின்னர் ரஜினி கே.எஸ்.ரவிக்குமாரை கண்டு கொள்ளவே இல்லை. அதேபோல் கமல், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களும் இவரை கைகழுவியதால் படங்களை இயக்குவதை தவிர்த்து தற்போது நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் உண்மையில் இவரை போன்ற ஒரு இயக்குனரை பார்க்கவே முடியாது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வரும் பல இயக்குனர்கள் இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்கள் தான். உதாரணமாக இயக்குனர் சேரன் மற்றும் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கே.எஸ்.ரவிக்குமார் மிகவும் கோபப்படுவாராம் ஆனால் அடுத்த நிமிடமே கோபம் தணிந்து கூலாகி விடுவாராம். அதே போல் அனைவரிடமும் மிகவும் பாசமாக பழகும் இயக்குனரும் இவர் தானாம். தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் அனைவருக்கும் தனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களையும் கற்று கொடுப்பாராம்.

rajinikanth ks ravikumar
rajinikanth ks ravikumar

இவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை தாண்டி சிறந்த மனிதர் என்பது தான் நிதர்சனமான உண்மை. இப்படிப்பட்ட மனிதர் இப்போதும் ரஜினி கமலுக்காக கதை எழுதி வைத்துள்ளாராம். ஆனால் அவர்கள் கால்ஷீட் கொடுக்காதது தான் சோகம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்