ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஒரு படம் ஹிட் கொடுத்துட்டு இவ்வளோ அளப்பறையா.? பாலிவுட் வாய்ப்பை நிராகரித்த விஜய் சேதுபதியின் மகள்

புல்லட் பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகை அந்த நடிகை தெலுங்கில் வெளியான உப்பன்னா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக  அறிமுகமாகி, அதன்பிறகு ஷியாம் சிங்கா ராய், பங்கர்ராஜு போன்ற தெலுங்கு படங்களில் நடித்து 18 வயதில் வெகு சீக்கிரம் பிரபலமானார்.

பிறகு லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான ‘தி வாரியர்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி ஷெட்டி, தற்போது பாலா இயக்கும் ‘வணங்கான்’ என்ற படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார்.

தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘மச்சர்ல நியோஜகவர்கம்’ என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் பட புரமோஷனுக்காக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கீர்த்தி ஷெட்டி ஓபனாக பேசியிருக்கும் பேட்டி தற்போது வைரலாகிறது.

இதில் கீர்த்தி ஷெட்டியின் முதல் படமான உப்பன்னா படத்தில் விஜய் சேதுபதி போன்ற பன்முகத் திறமை கொண்ட தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்தது பெருமையாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். மேலும் ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்யும்போது அதில் இருக்கும் கேரக்டர் எனக்கு பிடித்தால் மட்டுமே அந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொள்வேன்.

குறுகிய காலத்திலேயே சினிமாவில் வெற்றி தோல்வி அனுபவம் எனக்கு கிடைத்துவிட்டது. மேலும் பாலிவுட்டில் இருந்து நிறைய படங்கள் வந்தன. நான்தான் அவற்றை நிராகரித்து விட்டேன். ஹிந்தி படங்களில் நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

தற்போது தமிழ், தெலுங்கில் மட்டும் நடிப்பதையே விரும்புகிறேன்’ என்று பாலிவுட் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டேன் என்பதை தெள்ளத் தெளிவாக கீர்த்தி ஷெட்டி தெரிவித்து தமிழ், தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். மேலும் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுக் கொண்டிருக்கும் கீர்த்தி ஷெட்டி தற்போது முன்னணி நடிகைகளின் போட்டியாக மாறி உள்ளார்.

- Advertisement -

Trending News