செலிபிரிட்டி கிரஸ்னா இவர் மேல தான்.. வெட்கத்துடன் சொன்ன கீர்த்தி ஷெட்டி

கடந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த உப்பெனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன் பிறகு தற்போது தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி என பிற மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘தி வாரியர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் ஜூலை 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்தப் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் ஒரு படத்திலும் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 18 வயதுடைய இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கும் தமிழ் படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளியாக உள்ளது.

ஆனால் அதற்கு முன்பே எக்கச்சக்கமான தமிழ் ரசிகர்களை வசியப்படுத்தும் கீர்த்தி ஷெட்டி, சமீபத்திய பேட்டி ஒன்றில் செலபிரிட்டி கிரஸ் என்றால் அது இவர் மேல் தான் இருக்கிறது என வெட்கப்பட்டு கூறியிருக்கிறார். அதாவது கீர்த்தி ஷெட்டி தற்போது தொடர்ந்து டாக்டர், டான் போன்ற இரண்டு படங்களில் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்த சிவகார்த்திகேயன் மீது தான் ஈர்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அவருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.

இவருடைய இந்த ஆசையை ஏற்கனவே எப்படியோ தெரிந்து கொண்ட சிவகார்த்திகேயன் 20 வயது வித்தியாசம் உடைய கீர்த்தி ஷெட்டி தான் தன்னுடைய அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என அடம்பிடித்த கேட்டதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர் ராஜ் குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் தயாரிப்பில் மாவீரன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயனின் 21-வது படமான மாவீரன் படத்தில் இவர் ராணுவ வீரராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பிறகு மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வின் இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியை நடிக்கவைக்க ஆசைப்பட்டிருக்கிறார். அப்படி இவர்கள் இருவரும் இணைந்தால் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி செட்டி இணையும் முதல் படமாக இது அமையும்.

- Advertisement -