அஜித், விஜய் உச்சத்தில் இருக்க இதுதான் காரணம்.. அவர்களை வியந்து பார்த்த கோவை சரளா

நடிகை கோவை சரளா ஒரு துணை நடிகையாக தமிழ் சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இப்போது நான்கு மொழிகளிலும் முக்கிய நடிகை ஆக இருக்கிறார். காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம் என அத்தனையிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான செம்பி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவிற்கு பிறகு காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நன்றாக நடிக்க கூடிய ஒரே நடிகை இவர்தான். மனோரமாவிற்கு பிறகான வெற்றிடத்தை இவர் நிரப்பி இருக்கிறார் என்று கூட சொல்லலாம். நான்கு மொழிகளிலும் முக்கிய நடிகையாக இவர் இருப்பதால் அந்தந்த மாநிலங்களில் உள்ள மிகப்பெரிய ஹீரோக்களுடன் எல்லாம் இவர் நடித்திருக்கிறார்.

Also Read:அஜித்தின் சினிமா வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்ட 6 படங்கள்.. நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை காட்டிய வாலி

சமீபத்திய பேட்டி ஒன்றில் கோவை சரளா தன்னுடைய சினிமா அனுபவத்தைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அப்போது கோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய்யிடம் தான் வியந்து பார்த்த ஒரு விஷயத்தைப் பற்றி மனம் திறந்து பேசி இருந்தார் இவர். மேலும் அவர்கள் உச்ச நட்சத்திரமாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்று சொல்லியிருந்தார்.

நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் வளர்ந்து வந்த காலத்திலேயே கோவை சரளா அவர்களுடன் நடித்திருக்கிறார். விஜய் மற்றும் அஜித் அப்போது எப்படி இருந்தார்களோ அதே போல் தான் இப்பவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே ஆறு மணிக்கு படப்பிடிப்பு என்றால் ஐந்து மணிக்கு எல்லாம் சரியாக படபிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார்கள்.

Also Read: பதற வைத்த நிலநடுக்கம், லியோ டீம் எப்படி இருக்கு? தயாரிப்பாளர் போட்ட ட்வீட்

வளர்ந்து வந்த காலத்தில் தான் அப்படி இருந்தார்கள் என்றால் இன்று வரை இருவருமே நேரம் தவறாமையை கடைப்பிடித்து வருகிறார்கள். உச்சத்தில் இருக்கும் இருவர் இப்படி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் விஜய் மற்றும் அஜித் இதை பின்பற்றுகிறார்கள். இதுதான் இவர்கள் இருவரும் உச்ச நட்சத்திரங்களாக இருப்பதற்கு காரணம்.

அவர்களைப் பற்றி ஆயிரம் குறைகளை சொன்னாலும் சினிமாவின் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறை மற்றும் மரியாதை தான் இன்று சினிமாவே கொண்டாடும் உச்ச நட்சத்திரங்களாக மாற்றி இருக்கிறது. இது எப்போதுமே நான் அவர்களிடம் வியர்ந்து பார்க்கும் விஷயம் என்று கோவை சரளா சொல்லி இருக்கிறார்.

Also Read:இப்பவே தோல்வி பயத்தை காட்டும் கமல்.. பதட்டத்துடன் இருக்கும் லியோ படக்குழு

- Advertisement -