மாட்டிக்கிட்டியே பங்கு, பிளேட்டை மாற்றி போட்ட அரசியல்வாதி.. கூவத்தூர் த்ரிஷா சர்ச்சைக்கு வைத்த முற்றுப்புள்ளி

Trisha Issue: பெரும் விஸ்வரூபம் எடுத்த த்ரிஷாவின் சர்ச்சை செய்திக்கு தற்போது முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. கூவத்தூரில் எம்எல்ஏக்கள் நடிகைகள் வேண்டும் என்று கேட்டதாகவும் கருணாஸ் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜு பகிரங்க பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள் அந்த வீடியோவை அதிவேகமாக ஷேர் செய்தனர். மேலும் த்ரிஷாவுக்கு ஆதரவாக திரை பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். ஆனால் த்ரிஷா தரப்பில் இருந்து மௌனமே பதிலாக கிடைத்தது.

அதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தை சோசியல் மீடியா ட்ரெண்டிங் ஆக மாற்றிய ரசிகர்கள் திரிஷா சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இப்படியாக பரபரப்பை கிளப்பிய இந்த விஷயத்தில் த்ரிஷா தன்னுடைய கண்டனத்தை அழுத்தமாக பதிவு செய்தார்.

Also read: திரிஷாவை இழுத்து சாக்கடையில் தள்ளிய அரசியல்வாதி.. மன்சூருக்கு மட்டும் Action இப்ப நோ Reaction

அதையடுத்து தற்போது அந்த அரசியல்வாதியும் ப்ளேட்டை மாற்றி போட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். நான் கூறியதை மீடியாக்கள் திரித்து போட்டு விட்டனர். வெங்கடாசலம் த்ரிஷா மாதிரின்னு தான் சொன்னார். திரிஷாவை சொல்லவில்லை என அந்தர் பல்டி அடித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் திரைத்துறையினர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் திரிஷா விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானதால் இவர் அப்படியே மாத்தி பேசி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இருப்பினும் நடிகைகளை கிள்ளுக்கீரை போல் நினைத்து இப்படி அவதூறாக பேசுபவர்கள் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டும். அதனால் த்ரிஷா இந்த விவகாரம் குறித்து பின் வாங்காமல் சட்டரீதியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துக்களும் வலுவாக வந்து கொண்டிருக்கிறது.

Also read: தேரை இழுத்து தெருவில் விட்ட அரசியல்வாதி.. சிங்கப்பெண்ணாக மாறி திரிஷா போட்ட பதிவு

Sharing Is Caring:

அதிகம் படித்தவை