விஜய்யின் மாஸ் காட்சிகளை வைத்து எடுக்கப்பட்ட காட்சில்லா vs காங் சண்டைக்காட்சிகள்..

சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற காட்சில்லாvsகாங் படத்தில் காங் என்ற குரங்கு செய்யும் மாஸ் காட்சிகள் அனைத்துமே ஏற்கனவே விஜய் படங்களில் வந்த காட்சிகள் போல விஜய் ரசிகர்கள் எடிட் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். கடந்த சில வருடங்களில் விஜய் படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனைகள் செய்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் விஜய்யின் படங்களில் வரும் படம் சண்டை காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக அமைந்து வருகின்றது.

ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக விஜய் தன்னுடைய புதிய புதிய விஷயங்களை சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தி வருகிறார். அது ஸ்டைலாக இருப்பதால் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

குறிப்பாக குழந்தை ரசிகர்கள் விஜய்யின் ஸ்டைலை அப்படியே காப்பியடித்து செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம். இப்போது விஜய்யின் ஸ்டைல் ஹாலிவுட் ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது போல.

சமீபத்தில் வெளியான காட்சில்லாvsகாங் படத்தில் காங் காட்டும் மேனரிசங்கள் சண்டைக் காட்சிகள் அனைத்துமே ஏற்கனவே விஜய் படங்களில் வந்தது போன்ற பிம்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

godzilla-vs-kong
godzilla-vs-kong

இதனை கவனித்த ரசிகர்கள் வீடியோவை எடிட் செய்து இணையத்தில் உலாவிட்டனர். தற்போது இந்த வீடியோ தான் இணையதள ட்ரென்டிங்காக சென்று கொண்டிருக்கிறது. இந்த வீடியோவில் விஜய் செய்வதைப் போலவே காங் செய்வது ரசிகர்களை மிகவும் கவர்ந்ததுள்ளது.

- Advertisement -