சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அடப்பாவமே மாதவனுக்கு இன்னுமா சொந்த வீடு இல்லை.. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு.!

தான் தற்போது வரை வாடகை வீட்டில் தான் வசித்து வருவதாக நடிகர் மாதவன் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாதவன் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்.

இத்திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் மாதவன் கலந்து கொண்டு பல பேட்டிகளில் பேசி வருகிறார். ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் திரைப்படம், குற்றம்சாட்டப்பட்டு நிருபிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை குறித்த திரைப்படமாக அமைந்துள்ளது

இதனிடையே தற்போது வரை சென்னை மற்றும் துபாயில் இரண்டு வருடங்களாக மாறி, மாறி வாடகை வீட்டில் நானும் என் குடும்பமும் வசித்து வருகிறோம் என்று மாதவன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட், திரைப்படம் வெற்றி பெறும் போது அந்த பணத்தை வைத்து சென்னையில் ஒரு வீடு வாங்கி விடுவேன் என தன் மனைவியிடம் மாதவன் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் நான் நினைத்திருந்தால் கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து அதிக பணம் சம்பாதித்து வீடு வாங்கி இருப்பேன். ஆனால் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் போன்ற திரைப்படத்தை இயக்கி அதில் நானே நடித்தது தனக்கு முக்கியமானதாகவும்,பெருமையானதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மாதவன் தமிழில், அலைபாயுதே, மின்னலே, டும் டும் டும், இறுதிச்சுற்று உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இதேபோல ஹிந்தியிலும் 3 இடியட்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர். இப்படிப்பட்ட நடிகர் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருவது என்று சொல்வது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மும்பையில் சொந்த வீட்டில் வசித்து வரும் மாதவன்,துபாயிலும் வாடகை வீட்டில் தங்கி வருவதாகவும்,அங்கும் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பின் வீடு வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர்கள் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கி, பல சொத்துக்களை சேர்ந்து வரும் நிலையில், நடிகர் மாதவன் மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News