ஒரு நாளைக்கு ஒரு கோடி வேணுமாம்.. விஜய் சேதுபதி அடங்கவே மாட்டாரா? கொதித்த தயாரிப்பாளர்

கூத்துப்பட்டறையில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ராஜ்யம் படைத்து வருகிறார் விஜய் சேதுபதி. பத்தே நாளில் 3 படங்களை வெளியிட்டு மூன்று படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால் கோலிவுட் வட்டாரத்தில் சற்று சறுக்கலை சந்தித்து வரும் விஜய் சேதுபதி கதையில் கவனம் செலுத்தவில்லை என்பது தான் தற்போதைய விவாதமாக உள்ளது. சமீபத்தில் வெளிவந்த துக்ளக் தர்பார், லாபம், அன்னபெல்லே சேதுபதி ஆகிய படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

தனக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதால் எந்த ஒரு பட வாய்ப்பையும் விட்டுவைப்பதில்லையாம். அட்வான்ஸ் தொகையை வாங்கிக் கொண்டு தலையை ஆட்டி விடுகிறாராம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் நான்கு மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்பு குவிந்த வண்ணம் உள்ளது.

மற்ற மொழிகளில் வரும் பட வாய்ப்பிற்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் என்று சம்பளம் வாங்கி வருகிறாராம் விஜய் சேதுபதி என்பதை பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் வீடியோ ஒன்றில் வெளியிட்டுள்ளார். இவ்வளவு தொகை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்களும் தயாராக உள்ளது தான் இன்னும் ஆச்சரியம்.

மாஸ்டர் படத்தில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை வைத்து அடுத்தடுத்து மற்ற மொழிகளிலும் பட வாய்ப்பு வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. அதற்குப் பின்னர் எந்த ஒரு வெற்றிப்படம் கொடுக்கவில்லை என்பதால் தற்போது கமலஹாசனுடன் விக்ரம் படத்தில் உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது.

vijaysethupathi-laabam-cinemapettai
vijaysethupathi-laabam-cinemapettai

இனி வரும் பட வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்தால் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கலாம். தமிழ் சினிமாவில் தற்போது வில்லன் மற்றும் ஹீரோவாக ஆகிய இரண்டு கதாபாத்திரத்திலும் கலக்கி வரும் ஒரே ஹீரோ விஜய்சேதுபதி மட்டுமே.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்