வரிசை கட்டி நிற்கும் 23 பார்ட் 2 படங்கள்.. லோகேஷுக்கு டஃப் கொடுக்க வரும் வெற்றி இயக்குனர்

Lokesh Kanagaraj : சமீபகாலமாக கோலிவுட் பார்ட் 2 படங்கள் அதிகம் படையெடுக்கின்றனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 23 பார்ட் 2 படங்கள் தமிழ் சினிமாவில் வர இருக்கிறது. அந்த படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

அந்த வகையில் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் வீடியோ வெளியாகி இருந்தது. இந்தப் படம் பார்ட் 2 படமாக உருவாகிறது. அதேபோல் ரஜினியின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ஜெயிலர் படத்தின் பார்ட் 2 உருவாக இருக்கிறது.

ஷங்கரின் இயக்கத்தில் கமலின் நடிப்பில் இந்தியன் 2 மற்றும் 3 பாகங்கள் உருவாகி உள்ள நிலையில் விரைவில் ரிலீஸாக உள்ளது. தனி ஒருவன், தீரன், சர்தார், சார்பட்டா போன்ற படங்களும் செகண்ட் பார்ட் உருவாக இருக்கிறது.

ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸ்

மேலும் சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியான நிலையில் அடுத்ததாக ட்ரிபிள் எக்ஸ் படம் எடுக்க உள்ளனர். மேலும் விஷால் துப்பறிவாளன் 2 படத்தை எடுத்து வருகிறார். அதேபோல் சூது கவ்வும், டிமான்டி காலனி படங்களும் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது.

கேப்டன் மில்லர் படத்தின் தொடர்ச்சியாக அடுத்த பாகம் எடுக்க உள்ளனர். அதேபோல் பிரம்மாண்ட பட்ஜெட்டில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படமும் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. சிவகார்த்திகேயனின் அயலான் படமும் செகண்ட் பார்ட் எடுக்க உள்ளனர்.

அடுத்ததாக அரண்மனை 4, கலகலப்பு 3, 7 ஜி ரெயின்போ காலனி 2 ஆகிய படங்களும் லயன் அப்பில் இருக்கிறது. மேலுல் லோகேஷ் நிறைய செகண்ட் பார்ட் படங்களை வைத்திருக்கிறார்.

லோகேஷுக்கு டஃப் கொடுக்கும் வெற்றிமாறன்

அதாவது கைதி 2, விக்ரம் 2 மற்றும் லியோ 2 படங்களை லோகேஷ் எடுக்க இருக்கிறார். இப்போது இவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் வெற்றிமாறனும் தரமான இரண்டு செகண்ட் பார்ட் படங்களை கொடுக்க இருக்கிறார்.

அதாவது தனுஷின் வடசென்னை 2 மற்றும் விடுதலை 2 படங்களுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்