வெங்கட் பிரபு என்னசெய்வார்ன்னு உற்று நோக்கும் கோடம்பாக்கம்.. சரக்கு இல்லைன்னு ஒதுக்கிய நடிகர்கள்

Kodambakkam is closely watching what Prabhu Venkat will do: கங்கை அமரனின் கலை உலக வாரிசு வெங்கட் பிரபு, எந்த ஒரு சீரியசான விஷயத்தையும் கலாய்த்து அதை ஒன்றும் இல்லாமல் பண்ணி விடுவார்.அவரை கலாய்த்தவர்களையும் அவரது தரமான பதிலடி மூலமாக யோசிக்க வைப்பதில் கில்லாடி தான்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக சென்னை 28 படத்தின் மூலம் தடம் பதித்த வெங்கட் பிரபு திரை துறையில் பல ஏற்ற இறக்கங்களுடனே வலம் வந்தார்.

மங்காத்தா திரைப்படத்திற்கு பின் பல தோல்விகளில் சரிக்கி பின் மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அதன் பின்னும் இவரது கஸ்டடி, மன்மத லீலை போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் பல எதிர்மறையான விமர்சனங்களை கொண்டு வந்து சேர்த்தது.

 கோடம்பாக்கத்தில் உள்ள பிரபலங்கள் வெங்கட் பிரபுவிடம் சரக்கு இல்லை காலியாகிவிட்டது இனி அவர் படம் எடுத்தால் பிளாப்புதான் என்பது போல் கழுவி ஊற்ற ஆரம்பித்தார்கள்.

 இருந்த போதும் தளபதி இவர் மீது இருந்த நம்பிக்கையால் ஒரு ஜாலியாக படம் பண்ண வேண்டும் என்று வெங்கட் பிரபுவை அணுகினார்.  இவரின் கதை பிடித்து போக உடனடி ஒப்பந்தமானது விஜய் 68.

கோட் என பெயரிடப்பட்ட விஜய் 68  விறுவிறுவென தயாராகி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் 14 சித்திரை திருநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது.

தளபதி இரண்டு வேடங்களில் அசத்தும்  கோட் திரைப்படத்தில் 70%க்கு மேல ஃபுல்லா ஆக்சன் தானாம். படத்தின் சண்டைக் காட்சிகள் பிரத்தியேகமான தொழில்நுட்பத்துடன் வெறித்தனமாக எடுக்கப்பட்டுள்ளதாம்.

தன்னை கலாய்த்தவர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் வண்ணம் கோட் படத்தின் மூலம் ரசிகர்கள் மட்டுமல்லாது தன்னை தூற்றியவர்களையும் போற்ற வைக்க காத்திருக்கிறார் இந்த இயக்குனர்.

விமர்சனங்களை கூலாக கேண்டில் பண்ணும் வெங்கட் பிரபு

தற்போது கலாய்ப்பின் உச்சமாக டபுள் டக்கர் பட குழுவினர் கோட்படத்தின் போஸ்டரை வைத்து அனிமேஷன் கேரக்டர்கள் கோட் மீது சவாரி செய்வதாக படத்தை கலாய்த்து இருந்தனர்.

Double tucker team recreate Goat movie image

இதனை கண்டு கொண்ட வெங்கட் பிரபு என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! என் கோட் அ? என்று சிரிப்புடன் பதில் கூறி, விரைவில் ரிலீசாக உள்ள டபுள் டக்கர் பட குழுவினரை வாழ்த்தவும் செய்திருக்கிறார்.

இதுதான் வெங்கட் பிரபு!  தன்னை கலாய்த்தவர்களுக்கும் பாசிட்டிவா ரிப்ளை கொடுத்து அவர்களுக்கும் வாழ்த்து கூறுவது என்பது இவரால் மட்டுமே முடியும்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்