சொகுசு பங்களாவில் டேட்டிங்.. பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகளுடன் கே எல் ராகுல் ரகசிய உறவு

கிரிக்கெட் மற்றும் சினிமா இந்த இரண்டின் மீதும் ரசிகர்கள் அதிகமாக கவரப்படுகின்றனர். மேலும் கோலிவுட் வட்டாரத்தில் நட்சத்திரங்கள் டேட்டிங் செய்வது சாதாரணமாக பார்க்கப்படுகிறது. அதுவும் பாலிவுட்டில் இது சர்வ சாதாரணம் தான். அதாவது கிரிக்கெட் வீரர்களுடன் பாலிவுட் ஹீரோயின்கள் டேட்டிங் செய்து வருகிறார்கள்.

அவ்வாறு ஏற்கனவே ஹர்பஜன் சிங், விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா போன்றவர்கள் பாலிவுட் ஹீரோயின்களை காதலித்து திருமணம் செய்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது கேஎல் ராகுலும் சேர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ராகுலை சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.

தற்போது ராகுல், பிரபல ஹீரோவின் மகளுடன் டேட்டிங் செய்து வருகிறார். அதாவது ரஜினியின் தர்பார் படத்தில் வில்லனாக நடித்த சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி. இவர் 2015இல் நிகில் அத்வானி இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் ரிலேஷன்ஷிப் இல் உள்ளனர். இதற்காக மும்பையில் தனியாக 4 பெட்ரூம் கொண்ட சொகுசு பங்களாவை எடுத்து இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ராகுலின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த சொகுசு வீட்டில் மிக பிரமாண்டமான பர்த்டே பார்ட்டியும் நடைபெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து இவர்களது திருமணம் இந்த ஆண்டு 2022 இறுதிக்குள் நடைபெறயுள்ளது. மேலும் இதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே தொடங்கி விட்டதாம். மேலும் ராகுல் மற்றும் அதியா திருமணம் தென்னிந்திய முறைப்படி நடைபெற உள்ளதாம். அதாவது பிரபல நடிகர் சுனில் ஷெட்டி முல்கியில் மங்களூர் துளு பேசும் குடும்பத்தில் பிறந்தவர்.

அதேபோல் கே எல் ராகுல் மங்களூரை சேர்ந்தவர். இதனால் இவர்களது திருமணம் தென்னிந்திய முறைப்படி நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் ராகுல் பிறந்தநாள் அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை அதியா ஷெட்டி தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும் இவர்களது திருமண தேதியை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.