ரெட் ஜெயண்டுக்கு படத்தை இயக்கும் கிருத்திகா உதயநிதி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பொன்னியின் செல்வன் நடிகர்

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் மெர்சி சிவா நடிப்பில் வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தை இயக்கியிருந்தார்.

அதன் பிறகு சினிமாவில் சில காலம் படங்களை இயக்காமல் இருந்த கிருத்திகா கடந்த ஆண்டு ஜி5வில் வெளியான பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜெயராமனின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Also Read : முழு அரசியல் படமாக உருவாகியுள்ள மாமன்னன்.. வடிவேலுவை வைத்து காய் நகர்த்தும் உதயநிதி

இப்போது மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். அதுவும் பொன்னியின் செல்வன் நடிகரை ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளனர். அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றியால் இவர்கள் மூவருக்குமே தற்போது தமிழ் சினிமாவில் மார்க்கெட் உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஜெயம் ரவி கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். இந்த சூழலில் கிருத்திகா உதயநிதி அடுத்ததாக ஜெயம் ரவியின் படத்தை இயக்க உள்ளார்.

Also Read : ஹாரிஸ் ஜெயராஜ் கனவை உடைத்த ரெட் ஜெயண்ட்.. முட்டுக்கட்டையாக வந்த உதயநிதி

இந்த படத்தில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்க உள்ளாராம். தமிழில் ஓகே கண்மணி, மெர்சல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நித்யா மேனன். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து மிகவும் பிரபலமாகிவிட்டார்.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தை உதயநிதியின் நிறுவனம் ரெட் ஜெயண்ட் தயாரிக்கிறது. மேலும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது. கிருத்திகா தற்போது இதற்கான வேளையில் முழு வீச்சில் இறங்கி உள்ளாராம்.

Also Read : ஜெயம் ரவியின் மார்க்கெட்டை சல்லி சல்லியாய் நொறுக்கிய 5 படங்கள்.. வந்த சுவடு தெரியாமல் போன அகிலன்

- Advertisement -