இந்த ரெண்டு முன்னணி நடிகர்களுடன் படம் பண்ணனும், உதயநிதி மட்டும் வேண்டாம்.. அடம்பிடிக்கும் கிருத்திகா உதயநிதி

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சினிமாவை பொறுத்தவரையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி ஆகிய இருவருமே தனக்கென தனி பாணியை அமைத்துக் கொண்டு தங்களுடைய பாதையில் முன்னேறி வருகின்றனர்.

ஒரு பக்கம் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டார் என்றால் இன்னொரு பக்கம் இயக்குனராக கிருத்திகா உதயநிதி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார்.

கிருத்திகா உதயநிதி இயக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு படம் மட்டும் தோல்வியை தழுவினாலும் அவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் இதுவரை வணக்கம் சென்னை மற்றும் காளி போன்ற படங்கள் வெளிவந்துள்ளன. இதில் வணக்கம் சென்னை படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. காளி படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் தியேட்டரில் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை.

இந்நிலையில் அடுத்ததாக கிருத்திகா உதயநிதி வெப்சீரிஸ் மற்றும் ஆல்பம் பாடல்களை இயக்க உள்ளாராம். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வரும் தனுஷ் மற்றும் விக்ரம் ஆகிய இருவருடனும் ஒரு படம் பணியாற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் தான் நல்ல இயக்குனராச்சே, உதயநிதியை வைத்து ஒரு படம் பண்ணலாம் என்று கேட்டதற்கு, நான் நன்றாக இருப்பது பிடிக்கவில்லையா என்பதை போல குடும்பத்தையும் சினிமாவையும் ஒன்றாகச் சேர்க்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

kiruthika-udhayanidhi-cinemapettai
kiruthika-udhayanidhi-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்