சேர, சோழ, பாண்டியர்களால் அழிக்க முடியாத வேள்பாரி.. வஞ்சகத்தால் வீழ்த்தி மன்னரை சாய்த்த கதை

இயக்குனர் சங்கர் வேள்பாரி என்னும் நாவலை படமாக்க இருக்கிறார். இந்த படம் மூன்று பாகங்களாக, ஒவ்வொரு பாகங்களும் 700 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது என பல அப்டேட்டுகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கின்றனர். நடிகர் சூர்யாவும் விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் வேள்பாரி நாவல் படமாக இருக்கிறது என சொல்லியிருந்தார்.

சேர, சோழ, பாண்டியர்களை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருந்த தமிழ்நாட்டில் யார் இது புதிதாக வேள்பாரி என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்து இருக்கிறது. வேள்பாரி கொடையில் கர்ணனுக்கு நிகரானவன். அவனை வஞ்சித்து கொன்றது மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் வேள்பாரி வீரத்தால் வீழ்த்தப்படவில்லை துரோகத்தால் வீழ்ந்தான்.

Also Read: ஷங்கரின் 1000 கோடி பட்ஜெட் படமான வேள்பாரியின் மொத்த கதை இதுதான்.. துரோகத்தால் வீழ்த்தப்பட்ட வரலாறு

பசுவுக்காக மகனை கொன்ற மனுநீதி சோழன், சங்கம் வைத்து தமிழை வளர்த்த பாண்டியன், இமயம் சென்று கொடியேற்றிய சேரன் செங்குட்டுவன் கதைகள் தான் நமக்கு தெரியும். 300 கிராமங்களை தன்னுடைய ஆட்சியின் கீழ் வைத்து, 20,000 படைகளை மட்டுமே கொண்டிருந்த வேள்பாரி மன்னனிடம் இவர்கள் வீரத்தில் தோற்ற கதை தான் இது.

பாரி மன்னனின் பறம்பு நாட்டின் வளத்தின் மீது பொறாமை கொண்ட மூவேந்தர்கள் தனித்தனியாக அவரை எதிர்த்து போரிட்டு தோற்று போயினர். பின்னர் மூவரும் இணைந்து லட்சக்கணக்கான படைகளோடு, வெறும் 20,000 படைகள் கொன்ற பறம்பு நாட்டின் மீது போர் தொடுத்தனர். ஆனால் பாரி மன்னன் எறும்புகளையும், அட்டைப்பூச்சிகளையும் கொண்டு மூவேந்தர்களின் யானைப்படை, குதிரைப்படையை வெற்றி கண்டான்.

Also Read: லோகேஷ்க்கு போட்டியாக 4 மல்டி ஸ்டார்களுடன் களமிறங்கும் ஷங்கர்.. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் வேள்பாரி

வேறு வழியின்றி சேர, சோழ பாண்டிய மன்னர்கள் மூவரும் புலவர்கள் வேடத்தில் பாரி மன்னனின் அரசவைக்கு சென்றனர். தமிழுக்காக எதையும் செய்யக்கூடிய பாரியிடம் அவர்களின் தமிழுக்கு பரிசாக அவனின் நாட்டையும், உயிரையும் கேட்டனர். பாரி மன்னன் வந்திருப்பது இவர்கள் தான் என தெரிந்தும் தன்னுடைய நாட்டையும், உயிரையும் பரிசாக கொடுக்க ஒப்புக் கொண்டான்.

மூவேந்தர்கள் பாரி மன்னன் மகள்களான அங்கவை, சங்கவை கண் முன்னாடியே அவன் கண் இமைகளை வெட்டினர். ஒரு கையை வெட்டினர். இறுதியாக தாகத்திற்கு தண்ணீர் கேட்ட பாரி மன்னனின் தலையை வெட்டி கடலில் தூக்கி எறிந்தனர். இத்தனை கொடுமையான மரணத்தை சந்தித்த பாரி மன்னனின் கதையை சங்கர் எப்படி படமாக்க இருக்கிறார் என்பது வேள்பாரி நாவலை படித்தவர்களுக்கு ஆவலாகவே உள்ளது.

Also Read: மூன்று பாகங்களாக பல நூறு கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம்.. மணிரத்தினத்தை ஓவர்டேக் செய்யும் ஷங்கர்

- Advertisement -